சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை புறநகர்... ஒட்டு மொத்தமாக அள்ளும் திமுக... செம ஷாக்கில் அதிமுக.. மாலை முரசு சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முக்கியமாக அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதுதவிர இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் களமிறங்குகின்றன.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேபோல பல செய்தி நிறுவனங்களும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

வட மாவட்டங்களில் கடும் போட்டி.. களத்தில் எதிரொலிக்கும் கூட்டணி பலம்... தந்தி டிவி கருத்துக்கணிப்புவட மாவட்டங்களில் கடும் போட்டி.. களத்தில் எதிரொலிக்கும் கூட்டணி பலம்... தந்தி டிவி கருத்துக்கணிப்பு

மாலை முரசு கருத்துக்கணிப்பு

மாலை முரசு கருத்துக்கணிப்பு

மாலை முரசு தொலைக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை முதல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது வருகிறது. இதுவரை 183 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் திமுக+ 117 தொகுதிகளிலும். அதிமுக+ 43 தொகுதிகளிலும் அமமுக+1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. மேலும், 22 தொகுதிகளில் இழுபறி நிலவுவதாக மாலை முரசு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் யார்

காஞ்சிபுரத்தில் யார்

இன்று 8ஆவது நாளாக சென்னை புறநகரைச் சுற்றியுள்ள தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாலை முரசு வெளியிட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக+ 46% வாக்குகளைப் பெறும். அதிமுக+ 41% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக+ 2% நாம் தமிழர் 4% மக்கள் நீதி மய்யம்+ 4% வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. உத்திரமேரூர் தொகுதியில் திமுக+ 44% வாக்குகளை பெறும். அதிமுக 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக+ 6% நாம் தமிழர் 4% மக்கள் நீதி மய்யம்+ 1% வாக்குகளை பெறும்.

Array

Array

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் தொகுதியில் திமுக+ 46% வாக்குகளை பெறும். அதிமுக 43% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக 1% நாம் தமிழர் 3% மக்கள் நீதி மய்யம் 1% வாக்குகளை பெறும். செய்யூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக களமிறங்குகிறது. அதில் விசிக 47% வாக்குகளை பெறும். அதிமுக 41% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும்.

பாமக vs விசிக

பாமக vs விசிக

திருப்போரூர் தொகுதியில் பாமகவுக்கும் விசிகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணியில் களமிறங்கும் விசிக 48% வாக்குகளை பெறும். அதிமுக கூட்டணியில் களமிறங்கும் பாமக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக 4% நாம் தமிழர் 3% மக்கள் நீதி மய்யம் 1% வாக்குகளை பெறும்.

செங்கல்பட்டில் அதிமுக

செங்கல்பட்டில் அதிமுக

செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக+ 43% வாக்குகளை பெறும். திமுக 41% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக 4% நாம் தமிழர் 5% மக்கள் நீதி மய்யம் 2% வாக்குகளை பெறும். தாம்பரம் தொகுதியில் திமுக+ 46% வாக்குகளை பெறும். அதிமுக 43% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக 5% நாம் தமிழர் 2% மக்கள் நீதி மய்யம் 3% வாக்குகளை பெறும்.

திமுக முன்னிலை

திமுக முன்னிலை

பல்லாவரம் தொகுதியில் திமுக+ 48% வாக்குகளை பெறும். அதிமுக+ 40% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக+ 4% நாம் தமிழர் 3% மக்கள் நீதி மய்யம்+ 4% வாக்குகளை பெறும். சோழிங்கநல்லூர்- திமுக+ 47% வாக்குகளை பெறும். அதிமுக+ 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அமமுக 2%, நாம் தமிழர் 4%, மநீம+ 6% வாக்குகளை பெறும். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக 47% வாக்குகளை பெறும். அதிமுக+ 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறது. அமமுக 4%, நாம் தமிழர் 3%, மநீம+ 2% வாக்குகளை பெறும்.

தொடரும் திமுக ஆதிக்கம்

தொடரும் திமுக ஆதிக்கம்

சென்னை புறநகர் பகுதிகளில் அதிமுக கூட்டணி 1 தொகுதியிலும் திமுக கூட்டணி 9 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சென்னை புறநகரில் கணிசமான வாக்குகளை பெறும் என்றும் மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது. சென்னையில் உள்ள தொகுதிகளில் பொதுவாக திமுக வலுவாக இருக்கும். அதேபோல இந்த முறை சென்னை புறநகர் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே ஆதிக்கம் செலுத்துவதாக மாலை முரசு தெரிவித்துள்ளது.

English summary
Malai murasu opinion polls on Chennai suburbs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X