Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லால்குடி தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. வியந்த திருச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் எக்கச்சக்கமாக சூடு பிடித்துவிட்டது.. இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தலைமையிலான இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அதிரடி முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திராவிடப் பேரியக்கங்களின் கோட்டையாகக் கருதப்படும் திருச்சி மாவட்டத்தில், மன்சூர் அலிகான் நேரடியாகக் களமிறங்குவதுடன், தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கும் விதமும் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான், கல்லக்குடி ரயில் நிலையத்திற்கு சென்று திடீரென ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து விட்டார்..

Mansoor Ali Khan Lalgudi Trichy Kallakudi Election 2026 Tamil Nadu Politics Railway Track Protest Kalaignar Karunanidhi 2026

மன்சூரலிகான் போட்டி

இதைப்பார்த்த அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் பதற்றமடைந்து விட்டனர்.. பதறிப்போய் அவரிடம் விளக்கம் கேட்டபோது, "தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து இதே கல்லக்குடியில் அன்றைய தினம் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் எப்படி தண்டவாளத்தில் தலைவைத்து போராடினாரோ, அந்த நினைவு வந்ததால் நானும் இங்கே படுத்துள்ளேன்," என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.

கலைஞரின் போராட்ட வரலாற்றை தனது தேர்தல் பிரச்சாரத் தொடக்கப் புள்ளியாக மாற்றிய அவர், அங்கிருந்தே தனது தேர்தல் பணிகளையும் முறைப்படி தொடங்கினார்.

தேர்தலுக்கு முன்பாக மன்சூர் அலிகான் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 பிரதான கட்சிகளுடனும் கூட்டணி வைக்கத் தீவிரமான முயற்சி மேற்கொண்டார். கடந்த 6 மாதங்களாக திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய தயாராக இருந்தும் அந்த தரப்பில் இருந்து முறையான பதில் வரவில்லையாம்..

தண்டவாளத்தில் தலை வைத்து

இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாய்ப்பு கோரியும் அங்கும் அவருக்குத் தொகுதி ஒதுக்கப்படவில்லையாம்.. அதனால்தான், "2 கட்சிகளும் எங்களை சரிவரக் கவனிக்கவில்லை" என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தற்போது தனித்துப் போட்டியிடும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். லால்குடியில் மன்சூர் அலிகான் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனுக்களையும் தாக்கர் செய்துள்ளார்..

லால்குடி போலீசார்

செய்தியாளர்களிடம் மன்சூர் அலிகான் தன்னுடைய நிறைய ஆதங்கங்களை கொட்டி தீர்த்து விட்டார்.. "திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டியில் வளர்ந்த எனக்கு இந்தப் பகுதி மக்கள் மீது தனி அக்கறை உண்டு. பலமுறை பதவியில் இருப்பவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளையோ, விவசாயிகள் கோரிக்கைகளையோ நிறைவேற்றவில்லை.. தமிழகத்தில் பெருகிவரும் போதைப்பொருள் புழக்கம் சிறுவர்களை சீரழிக்கின்றன. இதையும் அரசு தடுக்க தவறிவிட்டது" என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மன்சூரலிகானை பொறுத்தவரை , ஏற்கனவே 2011ம் ஆண்டிலேயே தனித்துப் போட்டியிட்ட அனுபவம் கொண்டவர்.. இதனால் தொகுதிக்குள் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. வெறும் வாக்கு சேகரிப்பாக மட்டுமன்றி, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு சவாலாகவே மன்சூர் அலிகானால் முன்வைக்கப்படுகிறது.

திராவிட கட்சிகள்

மன்சூரலிகான் மட்டுமல்ல, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.. இவர்களின் இந்த முடிவானது, இந்த தனித்துவமான அரசியல் பாதை 2026 தேர்தலை பலமுனைப் போட்டியாக மாற்றியுள்ளது.

மன்சூர் அலிகானின் இந்த உணர்ச்சிகரமான அணுகுமுறையும், டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களின் தனித்த முடிவுகளும், பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் எந்தளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்ல, பெரிய கட்சிகளின் கூட்டணி அரசியலைத் தாண்டி, மாற்றத்தை விரும்பும் மக்களின் வாக்குகள் இவரை போன்ற சிறிய கட்சிகளுக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+