சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது நல்லதுக்கில்லை.. அண்ணாமலையை எச்சரித்த மதிமுக துரை வைகோ! போகிற போக்கில் எடப்பாடிக்கும் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : எதற்கெடுத்தாலும் குறை கூறுவது எதிர்க்கட்சியின் வாடிக்கையாகிவிட்டது.. இது கண்டிக்கத்தக்க செயல் என அதிமுக இடைக்கால ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை மதிமுக தலைமை நிலைய செயலாளார் துரை வைகோ விமர்சித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் தமிழர் திருநாள் முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மூன்று மதத்தை சேர்ந்த மத தலைவர்கள் மூலம் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில மதிமுக சார்பில் துறை வைகோ அவர்கள் கலந்து கொண்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாக பணிபுரிந்த மாநகராட்சி ஊழியர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினார்.

மோடி மேஜையில் இருந்த பைல்.. ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உண்மையா? சீக்ரெட்டை உடைத்த பாஜக மோடி மேஜையில் இருந்த பைல்.. ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உண்மையா? சீக்ரெட்டை உடைத்த பாஜக

துரை வைகோ

துரை வைகோ

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அவர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவதூறாக பேசி வருவதாக கேள்விப்பட்டேன். பத்திரிக்கையாளர்கள் மக்களுக்காக உழைத்து வருகின்றனர். அரசியல்வாதிகளிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்ற பொழுது அதற்கு தகுந்தார் பதிலை அளிக்க வேண்டும்.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

அப்படி இன்றி முரண்பாடான முறையில் தவறான தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கோட்பாடு உண்டு. அதேபோல் பத்திரிகையாளர்களுக்கும் ஒரு கோட்பாடு உண்டு. பத்திரிகையாளர்களை தவறாக பேசுவது போன்ற கோட்பாடுகள் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கு இயக்கத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும்.

பெண் காவலர்

பெண் காவலர்

சென்னையில் நடைபெற்ற திமுக விழாவில் பெண் காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தில் பெண் காவலரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெண் காவலர் மீது தாக்குதல் நடைபெற்றது உண்மைதான். அதற்கான நடவடிக்கை காலதாமதம் ஆனதும் உண்மைதான். ஆனால் அதற்கான தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர் அவர்கள் நிச்சயமாக இதற்கான நடவடிக்கையை அதிரடியாக மேற்கொள்வார். இனி இப்படி ஒரு சம்பவம் நடை பெறாமல் இருக்க வேண்டும்

கண்டிக்கத்தக்கது

கண்டிக்கத்தக்கது

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு வழங்குதலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த துரை வைகோ," எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு வழங்குவதாக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு உள்ள நிலையில் எதிர்க்கட்சிக்கு எதை எடுத்தாலும் குறை கூறுவது வேலையாகி விட்டது. இது கண்டிக்கத்தக்க செயல்" என்று கூறினார்.

English summary
Complaining about anything has become a habit of the opposition party.. Mdmk Head Office Secretary Durai Vaiko has criticized AIADMK Interim Coordinator and Tamil Nadu Opposition Leader Edappadi Palaniswami
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X