மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது! தமிழக சட்டசபையில் நிறைவேறிய தீர்மானத்தின் முழு விவரம்
மத்திய அரசு கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்விதமான தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது என தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: மேகதாது அணைப்பிரச்சனை இரு மாநிலங்களின் உணர்வு பூர்வமான பிரச்சனையாகும். மத்திய அரசு கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்விதமான தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது என தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று தனது பேச்சை மிகவும் உருக்கமாக ஆரம்பித்து வீரவேசமாக பேசி முடித்தார் துரைமுருகன். என்று தனியும் இந்த சுந்திர தாகம் என்று பாரதி பாடியது போல், என்று முடியும் இந்த காவிரி போராட்டம்? என்ற வேதனையோடு மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்காக கொண்டு வருகிறேன் என்று கூறினார்.
போராட்டம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. முடியும் நிலை வரவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அவதாரத்தை எடுக்கிறது. காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு உரிமை உண்டு என்ற ஒப்பந்தம் இருந்தாலும், ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று போராட்டத்தை துவக்கியது கர்நாடக அரசு. இல்லை என அதற்கான காரணத்தை கூறி நாம் அதை முறியடித்தோம். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க டிரிபுனல் அமைக்க முடிவும் செய்தோம். அதற்கும் முட்டுக்கட்டை போட்டோம். அதையும் முறியடித்தோம் என்றார்.

போராடி வென்றோம்
இடைக்கால தீர்ப்புக்கும் முட்டுக்கட்டை. அதையும் வென்றோம். ஆணையம் போட வேண்டும் என்றோம். அதையும் தேவையில்லை என்றார்கள். அதையும் வென்று காட்டினோம். தீர்ப்பு வந்தது. அதை கெஜட்டில் போடமாட்டோம் என்றார்கள். போராடி அதையும் போட வைத்தோம். காவிரி ஆணையம், அதற்கான தலைவர்கள் என ஒவ்வொரு முறையும் போராடினோம். இந்த பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் என போகுமோ என்று பார்க்கிறேன். எதிர்க்கும் சக்தி, வீரியம் இருப்பதாக சந்தேகப்படுகிறேன். காரணம் எதையும் எதிர்ப்பதாக இருக்கிறார்கள்.

அங்கே ஒற்றுமை
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கூட அணைக் கட்டப் போகிறோம் என்கிறார்கள். இது புதிதல்ல, குண்டு ராவ் கூட அணைக் கட்ட போகிறோம். யாரையும் கேட்க தேவையில்லை என்றார். குமாரசாமி, எடியூரப்பா என எல்லோரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே நிலையில் இருக்கிறார்கள். தமிழக சட்டசபையில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம். காவிரி பிரச்சினையில் யார் யோக்கியன் என்பதை விட்டுவிட வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஏற்றுக்கொள்ள முடியாது
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியை பெறாமலும், தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும்
கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசு அனுமதி தரக்கூடாது
மத்திய அரசு கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்விதமான தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்த இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.காவிரி நதிநீர்ப் பிரச்சனை ஒரு நீண்டகால பிரச்சனையாகும். இதற்கு தீர்வாக உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சனை இரு மாநிலங்களின் உணர்வு பூர்வமான பிரச்சனையாகும்.

உணர்வுப்பூர்வமான பிரச்சினை
ஆதலால் காநாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மற்ற மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசிற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 18.05.2018 ஆணையின்படி, அதன் 16.02.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

தமிழக விவசாயிகள் நலனைப்பாதுகாப்போம்
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து பேசியதை அடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
-
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications