ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா ரூ.300 தான்..ஆவினில் பகல் கொள்ளை..படு மோசம் - பால் முகவர்கள் சுளீர்
சென்னை: பால்கோவா உற்பத்தி செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ஆவினில் ஒரு கிலோ பால்கோவா 540 ரூபாய் என்பது பகல் கொள்ளையைவிட படுமோசமானதாகும். பால் முகவர்கள் கூறியுள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் ஆவினில் இனிப்புகளின் விலையை உயர்த்துவது ஏன் என்றும் பால் முகவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் நேற்று முதல் குளோப் ஜாமூன், ரசகுல்லா, பால்கோவா, பால்பேடா, மைசூர்பாக், பிரிமியம் மில்க் கேக் உள்ளிட்ட 17 வகையான ஆவின் இனிப்புகளுடைய விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பால் கொள்முதல் விலையை சிறிதளவு கூட உயர்த்தாத நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2022 நடப்பாண்டில் மார்ச், ஜூலை மாதங்களில் நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை ஆவின் நிறுவனம் வரலாறு காணாத வகையில் உயர்த்தியது.

ஆயுத பூஜை விற்பனை இலக்கு
இந்நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனத்தின் சார்பில் 200 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது குளோப் ஜாமூன், ரசகுல்லா, பால்கோவா, பால்பேடா, மைசூர்பாக், பிரிமியம் மில்க் கேக் உள்ளிட்ட 7 வகையான ஆவின் இனிப்புகளுடைய விலையை கிலோவிற்கு 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

200 சதவிகிதம் லாபம்
செய்தியாளர்களிடம் பேசிய பால் முகவர்கள்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி, பால்கோவா, மைசூர்பாக் இனிப்புகளால் ஆவின் நிறுவனம் சுமார் சுமார் 200% லாபம் அடைந்து வரும் நிலையில் அதெல்லாம் போதாது என்று தற்போது அவற்றின் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

பால்கோவா
பால்கோவா ஒரு கிலோ அடக்க விலை அதிகபட்சமாக 190 ரூபாய் வரைதான் ஆகும். பால்கோவா இனிப்பிற்கு பெயர் போன ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல இனிப்புக்கடையின் விற்பனை விலையே ஒரு கிலோ 300 ரூபாய் எனும்போது ஆவினில் ஒரு கிலோ பால்கோவா 540 ரூபாய் என்பது பகல் கொள்ளையைவிட படுமோசமானதாகும்.

ஏற்கவே முடியாது
பால் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே நடப்பாண்டில் மட்டும் கடந்த மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது ஆவின் இனிப்புகளின் விற்பனை விலையையும் வரலாறு காணாத வகையில் உயர்த்துவதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் பொன்னுச்சாமி கூறியுள்ளார்.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications