சொத்துவரியை உயர்த்த முதல்வர் சம்மதிக்கவில்லை! இருப்பினும் வேறு வழியில்லாமல்... அமைச்சர் நேரு பேச்சு!
சென்னை: சொத்து வரியை உயர்த்த முதல்வர் சம்மதிக்காத போதும் வேறு வழியில்லாமல் உயர்த்த வேண்டிய சூழல் உருவானதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
திமுக சார்பில் வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சரியாக பணியாற்றினால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

பயிற்சி முகாம்
அண்மையில் நடைபெற்று முடிந்த நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் மூலம் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் பொறுப்புகளுக்கு வந்தவர்களுக்கு சென்னையில் இன்று ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதனை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நேரு, சொத்து வரி உயர்வு குறித்து மீண்டும் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அமைச்சர் நேரு
சொத்து வரியை உயர்த்த முதல்வர் சம்மதிக்கவில்லை என்றும் இருப்பினும் 2022-2023-ம் ஆண்டுகான நிதியை மத்திய நிதிக்குழுவிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெற வேண்டிய கட்டாயத்தை எடுத்துக் கூறிய பிறகே அவர் இசைவு தெரிவித்தார் எனவும் கூறினார். வேறு வழியில்லாமல் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை மக்களிடம் விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள்
மேலும், இப்போது உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருப்பவர்கள் வரும் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சர்களாகவும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அமைச்சர் நேரு, நீங்கள் மட்டும் சரியாக பணியாற்றினால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது என திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நோக்கி கூறினார்.

கருத்துரை
அருப்புக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஆகியோர் மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் கருத்துரை வழங்குகிறார்கள். கோப்புகளை எவ்வாறு கையாள வேண்டும், எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும், சர்ச்சைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பயிற்சி முகாமில் ஆலோசனைகள் நல்கப்படும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications