"கொங்கு நாடு.." பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பயோ டேட்டா பின்னணி என்ன.. எல்.முருகன் விளக்கம்
சென்னை: கொங்கு நாடு என்ற வார்த்தை தனது பயோடேட்டாவை இடம்பெற்றது என்பது பற்றி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று விளக்கம் அளித்திருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் முருகன். சமீபத்தில் மத்திய மோடி அரசு அமைச்சரவை விஸ்தரிப்பு செய்த போது இவருக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்று நிலையில் ஒவ்வொரு அமைச்சரின் பெயருக்குப் பின்னாலும் அவரது மாநிலம் மாவட்டம், வயது, கல்வித்தகுதி, உள்ளிட்ட விவரங்களுடன் பயோடேட்டா மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம்
ஒவ்வொரு அமைச்சர் பெயருக்குப் பின்னாலும் அனைத்து விவரங்களும் சரியாக இருந்த நிலையில் முருகன் பயோடேட்டாவில் மட்டும் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதிலாக கொங்கு நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்கு மாவட்டங்கள் இணைந்த பகுதி கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது . அவற்றை கொங்கு நாடு என்று குறிப்பிட்டு பயோடேட்டாவில் விவரக் குறிப்பு இடம் பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்றிய அரசு சர்ச்சை
பலதரப்பட்ட வாத விவாதங்களுக்கு கொங்குநாடு என்ற வார்த்தை காரணமாக மாறியது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் அனைவருமே மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருகிறார்கள். முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். எனவே அந்த வார்த்தைக்குப் பதிலடியாக கொங்கு நாடு என்று வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டு இருந்ததா அல்லது தவறுதலாக இடம் பெற்றிருந்ததா என்ற கேள்விகள் அப்போது எழுந்தன.

கொங்கு நாடு சர்ச்சை
இந்த சர்ச்சைக்கு இதுவரை மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கவில்லை. முதல்முறையாக இன்று முருகன் இதுபற்றி நிருபர்களிடம் விளக்கம் அளித்து இருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்தபோது கொங்கு நாடு சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில் என்ன தெரியுமா.

டைப்பிங் மிஸ்டேக்
கொங்குநாடு என்ற வார்த்தை வேண்டுமென்றே போடப்பட்டது கிடையாது. டைப்பிங் மிஸ்டேக் காரணமாக அவர் ஒரு வார்த்தை இடம்பெற்று இருந்தது என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்த பயோடேட்டா மத்திய அரசால் வெளியிடப்பட்டபோது முருகனுக்கு என்ன அமைச்சரவை என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் பதவியேற்பு விழா முடிந்த பிறகு இரவு அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராக முருகன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொங்கு நாடு விவாதம் தேவையில்லை
ஒரு வழியாக நீண்ட நாட்கள் நிலவி வந்த சந்தேகம் மற்றும் சர்ச்சைகளுக்கு முருகன் இன்று பதிலளித்துள்ளார். இதன்மூலம் கொங்கு நாடு என்ற விஷயத்தில் பாஜக தீவிரம் காட்டவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. முருகன் அளித்த விளக்கம் திருப்தியளிக்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், இந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் தர பாஜகவே ரெடியாக இல்லை என்பதை முருகனின் விளக்கம் உணர்த்துகிறது. இத்தோடு முடிக்க வேண்டும் என்றுதான், மத்திய அமைச்சர் முருகன் நினைக்கிறார் என்பதால்தான், பிரிண்ட் மிஸ்டேக்.. அத்தோடு விடுங்கள் என்ற தொனியில் பேசியுள்ளார். எனவே இதுபோன்ற விஷயங்களில் இனிமேல் விவாதம் தேவை இல்லை. மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகள் பற்றி பொது வெளிகளில் விவாதம் நடந்தால் நல்லது என்று சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications