செஸ் ஒலிம்பியாட் பாடல்..பிரதமர் மோடி எங்கே? பரபரப்பை பற்ற வைத்த பாஜக! அமைச்சர் மா.சு. சொன்ன விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாதது குறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சித்த நிலையில், ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வீரர்களை வரவேற்பதற்கான பாடல் தானே தவிர பிரதமரை வரவேற்பதற்கான பாடல் அல்ல என தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    Chess Olympiad முழுமையான மருத்துவ பரிசோதனைகளுடன் நடைபெறும் | Minister மா.சுப்ரமணியன் விளக்கம்

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.

    சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 2,000- க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    செஸ் ஒலிம்பியாட்

    செஸ் ஒலிம்பியாட்

    குறிப்பாக 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை என்ற நிலையில் இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்று நோக்க வைக்கும் எனக் கருதப்படுகிறது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

    வரவேற்பு பாடல்

    வரவேற்பு பாடல்

    இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் 2022க்கான வீடியோ டீசரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த வீடியோவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை நடிகை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், செஸ் ஒலிம்பியாட்டின் முழு பாடலையும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி படம்

    பிரதமர் மோடி படம்

    இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் டீசர் வெளியான போது செஸ் ஒலிம்பிய பாடலின் டீசரில் விஸ்வநாதன் ஆனந்த் இல்லையா? திமுக அரசின் இந்த விளம்பரத்தில் எந்த பொருளும் இல்லை, முதலமைச்சர் விளம்பரம் தேடுகிறார் என பாஜக மாநில தலைவர் ஆன அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வெளியான உள்ள பாடலில் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி இந்தியாவில் செஸ் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தற்போது வெளியாகி உள்ள செஸ் ஒலிம்பிய வரவேற்பு பாடலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெறவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

     மா.சுப்பிரமணியன் பதில்

    மா.சுப்பிரமணியன் பதில்

    இது தொடர்பாக பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை பொதுவெளியிலும் சமூக வலைதளங்களையும் வைத்துள்ளனர். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெறாத குறித்து தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு 340க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் வரவேற்பு பாடலில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெறவில்லை என்கிறார்கள் செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வீரர்களை வரவேற்பதற்கான பாடல் தானே தவிர பிரதமரை வரவேற்பதற்கான பாடல் அல்ல என கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+