சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 நாட்கள் மாமல்லபுரத்தை விட்டு நகர மாட்டேன்! முதலமைச்சரை மனம் குளிர வைத்த அமைச்சர் மெய்யநாதன்!

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் மாமல்லபுரத்தை விட்டு அடுத்த 12 நாட்களுக்கு நகர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்.

Recommended Video

    தமிழர் வரலாற்றை கண்முன் கொண்டுவந்த டாப் தொழில்நுட்பம்..

    செஸ் போட்டி நடைபெற்று வரும் இடத்தில் ஒரு சிறிய குறையோ புகாரோ கூட வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக அவர் செயலாற்றி வருகிறார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்டத்திற்கு பின்னணியில் உதயநிதி ஸ்டாலினின் கடுமையான உழைப்பு இருப்பதாக பார்ப்பவர்களிடம் எல்லாம் பெருமிதம் தெரிவித்து வருகிறார் அமைச்சர் மெய்யநாதன்.

    வெறும் ரூ.35 தான் கட்டணம்.. போக்குவரத்தில் சிக்காமல் பெங்களூர் விமான நிலையத்துக்கு பறக்கலாம்!வெறும் ரூ.35 தான் கட்டணம்.. போக்குவரத்தில் சிக்காமல் பெங்களூர் விமான நிலையத்துக்கு பறக்கலாம்!

    செஸ் ஒலிம்பியாட்

    செஸ் ஒலிம்பியாட்

    இந்திய வரலாற்றில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக 186 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்களுக்கான வரவேற்பு முதல் வழியனுப்புவது வரை தமிழக அரசே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறது. இதனிடையே நேற்று முன் தினம் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா உலகம் முழுவதும் பார்வையாளர்களை கவர்ந்தது.

    போட்டிகள் தொடங்கின

    போட்டிகள் தொடங்கின

    இந்நிலையில் நாள்தோறும் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறும் நிலையில், அடுத்த 12 நாட்களுக்கும் மாமல்லபுரத்தை விட்டு நகர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் அமைச்சர் மெய்யநாதன். வீரர்களுக்கு தேவையான வசதிகள் முதல் இன்னும் பல விவகாரங்களை நேரடியாக பார்த்து பார்த்து அங்கு முகாமிட்டு செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் மெய்யநாதன்.

    முதல்வர் பாராட்டு

    முதல்வர் பாராட்டு

    அமைச்சர் மெய்யநாதனின் ஒவ்வொரு நடவடிக்கையும் முதலமைச்சர் ஸ்டாலினின் மனம் குளிரும்படியாக இருப்பது கவனிக்கத்தக்கது. முதல்முறை அமைச்சராக இருக்கும் ஒருவர் சீனியர் அமைச்சர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செயலாற்றுவதை எண்ணி ஸ்டாலின் பெருமைப்பட்டிருக்கிறார். இதனிடையே அமைச்சரவையில் மெய்யநாதனை சேர்க்கும் போது ஆரம்பத்தில் அவரது செயல்பாடுகள் மீது தனக்கு ஒரு சந்தேகம் இருந்ததாக அண்மையில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    உட்கட்சி பிரச்சனை

    உட்கட்சி பிரச்சனை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்தெட்டு உட்கட்சி பிரச்சனைகளும், பஞ்சாயத்துக்களும் இருக்கின்ற போதும் அதற்கெல்லாம் இது நேரமில்லை என முழுமையாக அந்த வேலைகளை தள்ளி வைத்திருக்கிறார் அமைச்சர் மெய்யநாதன். எதுவாக இருந்தாலும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு பிறகு பார்த்துக்கொள்வோம் எனக் கூறி தன்னை சந்திக்க வருவதாக கூறிய புதுக்கோட்டை மாவட்ட கட்சிக்காரர்களுக்கும் தடை போட்டுவிட்டார்.

    English summary
    Minister Meyyanathan camping at Mamallapuram: செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் மாமல்லபுரத்தை விட்டு அடுத்த 12 நாட்களுக்கு நகர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X