சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்சார உற்பத்தி அதிகரித்து விட்டது! வெளி மாநிலங்களுக்கு விற்பனை: செந்தில்பாலாஜி ஹேப்பி

Google Oneindia Tamil News

சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு மின் உற்பத்தி அதிகரிப்பால் வெளிமாநிலங்களுக்கு மின் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Senthil Balaji Speech | Coal Shortage | Power Cut Problem | Oneindia Tamil

    கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் குறித்து தலைமைப் பொறியாளர்களுடன் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார்.

    Minister Senthil Balaji says about power generation

    ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நம்முடைய மின் தேவை என்பது உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய அளவிற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் அதிகபட்ச மின்தேவையாக 17,563 மெகாவாட் இருந்தது. அன்று மின் நுகர்வோரால் உபயோகப்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு மட்டும் 38.9 கோடி யூனிட்டுகள் ஆகும். தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் கூட 16000 மெகாவாட் மேலாக மின் நுகர்வு அதிகமாக இல்லை.

     பண மோசடி வழக்கு! அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு பண மோசடி வழக்கு! அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு

    2020 ஆம் ஆண்டிலும் அதிகமான மின்நுகர்வு இல்லை. 2020 ஆம் ஆண்டு 8 நாட்கள் 16 ஆயிரம் மெகாவாட் மேல் மின்தேவை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த மே 1 ஆம் தேதி 1.44 லட்சம் யூனிட்டுகளையும், 8ஆம் தேதி அன்று 4.5 லட்சம் யூனிட்டுகளையும் யூனிட் ஒன்று ரூ 12 என கணக்கிட்டு வெளிமாநிலங்களுக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது.

    தமிழகத்தில் மின்வெட்டு போன்ற மாயத்தோற்றத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தங்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்தவுடன் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் கணிசமாக மின்பாதைகளில் ஏற்பட்டு வரும் இழப்புகள் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    English summary
    Minister Senthil Balaji says about power generation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X