நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டரை முடக்கிய ஹேக்கர்கள்! போராட்டத்திற்கு பின் மீட்பு!
சென்னை : நேற்று ஹேக் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் மர்ம நபர்கள் பதிவிட்டிருந்த ட்வீட்களும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சர்களில் முக்கியமான இலாகாவான மின்சாரம் மதுவிலக்கு துறையை கரூரைச் சேர்ந்த அமைச்சரான செந்தில் பாலாஜி வகித்து வருகிறார்.
மேலும் கோவை மண்டல பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தனது துறை மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளியிடுவது வழக்கம்.

செந்தில் பாலாஜி
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியவை ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல்கள் பதிவுச் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பின்னர் பலத்த போராட்டங்களுக்குப் பின் அது மீட்கபட்டது.

ட்விட்டர் பக்கம்
அந்த வகையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் நேற்று ஹேக் செய்யப்பட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது. மேலும் ட்விட்டரில் அவரது ட்விட்டர் கணக்கின் பெயரும் மாற்றப்பட்டதோடு, கொரோனாவுக்காக நிதி திரட்டப்படுவதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது.

கிரிப்டோ வாலட்
அந்தப் பதிவில், "அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. எங்கள் ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக கிரிப்டோ கரன்சி குறித்து பதிவுகள் வந்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜியை பின் தொடர்பவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதனையடுத்தே அந்த கணக்கு ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது.

கணக்கு மீட்பு
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதனை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து பலத்த முயற்சிகளுக்குப் பிறகு நேற்று ஹேக் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் மர்ம நபர்கள் பதிவிட்டிருந்த ட்வீட்களும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications