சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி தரைக்கு கீழேதான் கரண்ட்.. ஸ்டாலின் தொகுதியிலிருந்து தொடங்கியது திட்டம்.. அமைச்சர் தகவல்!

மின்சார கேபிள்கள் குறித்து அமைச்சர் தங்கமணி பேரவையில் இன்று புது தகவலை வெளியிட்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: சாலையை தோண்டவே தேவையில்லை.. அதற்கு பதிலாக முதல்முறையாக, நவீன முறையில் கொளத்தூர் உட்பட சென்னை முழுவதும் புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின், "சென்னையில் உயர் மற்றும் தாழ்வழுத்த மின் கேபிள்களை புதைவடக் கம்பிகளாக மாற்ற ரூ.2,051 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறியும், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் புதைவட கம்பிகளாக மாற்றும்பணி 10 சதவீதம்கூட முடிக்கப்படவில்லை" என்றார்.

இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சரும், சாலைகளில் பள்ளங்களை தோண்டாமல் துளையிட்டு கேபிள்களை பதிக்க ஆய்வு செய்து வருவதாக கூறியிருந்தார்.

கேபிள்கள்

கேபிள்கள்

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்றைய சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது இதே பிரச்சனையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். அப்போது, "கொளத்தூர் தொகுதியில் புதைவட மின் கேபிள்கள் போட வேண்டும் என பல முறை சபையில் தெரிவித்து விட்டேன்.

புதைவடம் அமைக்கும் பணி

புதைவடம் அமைக்கும் பணி

ஆனால் எந்த பணிகளும் நடக்கவில்லை. நான் சென்னை மேயராக இருந்தபோது பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் குழு ஒன்றினை அமைத்து அதன் ஆலோசனைகளையும் பெற்று மாநகராட்சி பணிகளை விரைந்து முடித்தோம். அதுபோன்று ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்து கொளத்தூர் பகுதியில் புதை வடம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க அமைச்சர் ஏற்பாடு செய்வாரா? என கேள்வி எழுப்பினார்.

நிறைய பிரச்சனைகள்

நிறைய பிரச்சனைகள்

இதற்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்து பேசும்போது, "உண்மையிலேயே சாலைகளை தோண்டி மின் கம்பி புதை வடங்களை புதைக்கும்போது நிறைய பிரச்சனைகள் வருகின்றன. ஒரு இடத்தில் தோண்டினால் தொலைபேசி கம்பி கொஞ்சம் பாதிக்கப்பட்டதற்கே ரூ.60 லட்சம் நஷ்டஈடு கேட்டார்கள்.

உயர்மின் கோபுரங்கள்

உயர்மின் கோபுரங்கள்

அதனால் சாலையை தோண்டாமல் நவீன முறையில் முதன் முறையாக கொளத்தூர் உட்பட சென்னை முழுவதும் புதைவிட கம்பி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பணி முடிந்துவிடும். அதேபோல, தமிழகம் முழுவதும் 6,411 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன, தேவைப்படும் இடங்களில் கூடுதல் கோபுரங்கள் அமைக்கப்படும்" என்றார்.

English summary
Minister Thangamani says, Electric cables are converted to Fossil cables in Chennai City
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X