சபாஷ் ரம்யா பாரதி..சைக்கிளில் நைட் ரவுண்ட்ஸ் போன ஐபிஎஸ் அதிகாரிக்கு.. ஸ்டாலின் சுடச் சுட வாழ்த்து
சைக்கிளில் இரவு ரோந்து பணி சென்ற ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
சென்னை: சைக்கிளில் இரவு ரோந்து பணி சென்ற ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார் தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்
எனவும் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை வடக்கு இணை ஆணையராக ரம்யா பாரதி ஐபிஎஸ் இருந்து வருகிறார். இவர் 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். இவரை கடந்த ஜனவரி மாதம் சென்னை வடக்கு இணை ஆணையராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது.
அப்போது முதல் தன்னுடைய பணிகளை இவர் சிறப்பாக செய்து வருவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் சைக்கிளில் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்.

சைக்கிளில் ரோந்து சென்ற ரம்யா பாரதி
சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று காவலர்களை கண்காணித்துள்ளார். அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சைக்கிளில் பயணம் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்போது இரவு பணியில் இருந்த காவலர்களிடம் அங்கு இருக்கும் நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

ஆய்வு செய்த இணை ஆணையர்
சென்னை பாரிமுனை பூக்கடையில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை 8 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட சரகங்களில் சைக்கிளில் சென்று இணை ஆணையர் ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக இரவில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தார்.

ரம்யாபாரதி புகைப்படங்கள்
அப்போது, இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வு குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரம்யா பாரதிக்கு சுடச்சுட வாழ்த்து கூறியுள்ளார்

முதல்வர் வாழ்த்து
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications