சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் அறிவித்த "1000 ரூபாய்".. எப்போது கிடைக்கும் தெரியுமா?.. நிதியமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்

ஸ்டாலின் அறிவித்த 1000 ரூபாய் குறித்து நிதியமைச்சர் பதிலளித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 4 மாத காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும், இல்லத்தரசிகளுக்கான 1000 ரூபாய் அறிவிப்பு எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக நிதியமைச்சர் பதிலளித்துள்ளார்.

திமுகவின் வாக்குறுதியில் கூறியிருந்த இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகி வருகிறது.

ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இன்னும் திமுக அரசு வெளியிடவில்லை.. கஜானாவை காலி செய்துவைத்துவிட்டு போயிருந்தது கடந்த அதிமுக அரசு.. மேலும் லாக் டவுன் போடப்பட்ட நேரம் என்பதால், அரசின் வருமானம் வரும் வழிகள் எல்லாம் நாலாபக்கமும் அடைக்கப்பட்டிருந்தன.

குறைகள் சொன்னால் ஏற்கும் முதல்வர் ஸ்டாலின்.. அடுத்தடுத்து உத்தரவிட்ட இரண்டு விஷயங்கள் குறைகள் சொன்னால் ஏற்கும் முதல்வர் ஸ்டாலின்.. அடுத்தடுத்து உத்தரவிட்ட இரண்டு விஷயங்கள்

சலுகைகள்

சலுகைகள்

அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை மறுக்க முடியாது.. தொற்று குறைந்த நிலையில், லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில், 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் பெருகியது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி ஒரு அறிவிப்பே வரவில்லை. ஒருவேளை உள்ளாட்சி தேர்தலுக்குள் திமுக அரசு அதை நிறைவேற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதுவும் நடக்கவில்லை..

 நமது அம்மா

நமது அம்மா

இதைதான் அதிமுக விவகாரமாக பெரிதுப்படுத்தி வருகிறது.. இந்த விவகாரம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான "நமது அம்மா"விலும் வெளியானது.. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல், அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதுதான் சொல்வது ஒன்று. செய்வது வேறொன்று என்பதோ? என்று அந்த நாளிதழில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

பேட்டி

பேட்டி

இதுகுறித்து 15 நாட்களுக்கு முன்பு, அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்படவில்லையே என்று கேட்கின்றனர்... கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதனைச் சரி செய்யும் பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். ஒருமாதத்துக்கோ, அல்லது 2 மாதங்களுக்கோ என்றால் உடனே வழங்கிவிடலாம்... ஆனால் காலத்துக்கும் வழங்கக்கூடிய திட்டம் இது. அதனால் இதனை செயல்படுத்துவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இன்னும் 3 மாதத்தில் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்" என்றார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இப்படிப்பட்ட சூழலில்தான் இதுகுறித்து நிதியமைச்சரே வாய் திறந்து பதிலளித்துள்ளார். இலவசங்கள், மானியங்கள் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது தடுக்குமா? என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கம் ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் சார்பில் நடந்தது.. இதில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "விலையில்லா திட்டங்களை எதிர்ப்பவர்கள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும்போது மட்டும் அமைதியாக உள்ளனர். காரணம், இங்கு அனைவருக்குமான தேவைகள் மாறுபடுகின்றன...

 உட்கட்டமைப்பு

உட்கட்டமைப்பு

அவைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமையாகும். தனக்கு தேவையில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு பயன்படும் திட்டங்களை எல்லாம் எதிர்த்து கொண்டிருக்க கூடாது.. சமூக கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருசேர மேம்படுத்துவது அவசியமாகும்.. அதேநேரம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் நல்ல நிலையில்தான் உள்ளது.

 உரிமைத்தொகை

உரிமைத்தொகை

போக்குவரத்து நெரிசல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங்களை கருத்தில்கொண்டு மகளிருக்கான 50 சதவீத மானிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது... அதற்கு பதிலாகவே அரசு பஸ்களில் அவர்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது... குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும்... அதற்கான தரவுகளை சேகரிக்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன..

 நலத்திட்டங்கள்

நலத்திட்டங்கள்

கிராமப்புற பெண்கள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் போன்ற பணிச்சுமையை குறைக்கும் உபகரணங்கள் கட்டாய தேவையாய் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வழங்க முடியாது. அதனால் ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது யாரெல்லாம் பயனாளிகள் என்று அரசு கண்டறிய வேண்டும்... நலத்திட்டங்கள் தவறான புள்ளிவிவரங்களால் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை.

கைரேகை

கைரேகை

அந்த வகையில் இதற்கு முந்தைய ஆட்சியில் பயிர்கடன், நகைகடன் தள்ளுபடி போன்றவற்றில் தவறான தரவுகள் இடம்பெற்றது கண்டறியப்பட்டது... நலத்திட்டங்களை அமல்படுத்துதற்கான தரவுகளை மத்திய அரசின் ஆதார் திட்டத்தில் இருந்து முழுமையாக பெற முடியாது.. ஆதாரில் கைரேகை உட்பட பல்வேறு போலியான ஆவணங்கள் உள்ளன.. இதனால் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக செல்வதை உறுதி செய்வதில் சிரமங்கள் உள்ளன... தகவல் மேம்பாடு தான் நலத்திட்டங்களை முழுமைப்படுத்தும்" என்றார்.

English summary
MK Stalin gov ready to execute election promise to give Rs 1000 for women soon, says Finance Minister PTR
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X