இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியல்.. முதலிடத்தில் மோடி! 23வது இடத்தில் மு.க.ஸ்டாலின்
சென்னை: இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இடம்பெற்றுள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் என்ற பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
கொரோனா, விவசாயிகள் போராட்டம், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் மோடியின் இமேஜ் சரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை தூள் தூளாக உடைத்தெறிந்து முதலிடம் வகிக்கிறார்.

ஆங்கில நாளிதழ்
இந்தியா முழுவதும் வெளிவரக் கூடிய பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் என்ற தலைப்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 23-வது இடத்தில் இருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரும் அளவில் தொடர் வெற்றிகளை ஈட்டியதன் மூலம் அவர் இந்த இடத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் மோடி
இதேபோல் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் மோடியும், இரண்டாமிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மூன்றாம் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இடம்பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு 13-வது இடத்தில் இருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யா நாத் இந்தாண்டு 6-வது இடத்துக்கு முன்னேறி செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சாதனை புரிந்திருக்கிறார்.

முதல் பத்து இடங்கள்
முதலிடம் மோடி, இரண்டாமிடம் அமித்ஷா, மூன்றாம் இடம் மோகன் பகவத், 4-வது இடம் ஜே.பி.நட்டா, 5-வது இடம் முகேஷ் அம்பானி, 6-வது இடம் யோகி ஆதித்யநாத், 7-வது இடம் கவுதம் அதானி, 8-வது இடம் அஜித் தோவல், 9-வது இடம் அரவிந்த் கெஜ்ரிவால், 10-வது இடம் நிர்மலா சீதாராமன் ஆகியோ முதல் 10 செல்வாக்கு மிக்க நபர்களாக இந்தியாவில் திகழ்கின்றனர்.

முக்கிய நபர்கள்
இதனிடையே செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் பின்வரும் முக்கிய முகங்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்ற விவரம் வருமாறு; மமதா பானர்ஜி 11-வது இடம், உத்தவ் தக்கரே 16-வது இடம், பினராயி விஜயன் 24-வது இடம், சோனியாகாந்தி 27-வது இடம், ஜெகன் மோகன் ரெட்டி 39-வது இடம், ராகுல்காந்தி 51-வது இடம், ப்ரியங்கா காந்தி 78-வது இடம், 94-வது இடம் கங்கணா ரனாவத்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications