550 பவுனின் "பயணம்"! பேக்கரி ஓனர் டூ மாடல் அழகி டூ புல்லட் காதலன் டூ 3 காதலிகள்.. விசாரணையில் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பூந்தமல்லியில் தொழிலதிபரை காதல் வலையில் விழவைத்து 550 சவரன் நகைகளை அபேஸ் செய்த வழக்கில் மாடல் அழகியிடம் இருந்து டுகாட்டி பைக், 100 கிராம் தங்க நகைகளை போலீஸார் கைப்பற்றினர்.

Recommended Video

    550 பவுனின் பயணம்! பேக்கரி ஓனர் டூ மாடல் அழகி டூ புல்லட் காதலன் டூ 3 காதலிகள்.. விசாரணையில் பகீர்

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி முத்துநகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு சேகர் (47), ராஜேஷ் (40) ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தூத்துக்குடியில் வசித்து வருகிறார்.

    மகன்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் பேக்கரி கடை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார்.

    புகார்

    புகார்

    அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த 550 சவரன் நகை, பல லட்சம் பணம் காணாமல் போனதாகவும் வீட்டில் இருப்பவர்கள் மீறி சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பூந்தமல்லி போலீஸார் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சேகரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நகை திருட்டு

    நகை திருட்டு

    அப்போது இந்த நகை திருட்டு பொய் புகார் என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. சேகருக்கும் வேளச்சேரியை சேர்ந்த மாடல் அழகி சுவாதிக்கும் (22) இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது. கள்ளக்காதலி மீதான மோகத்தால் சேகர் வீட்டிலிருந்த பணம், நகை என சிறுக சிறுக திருடி கொடுத்துள்ளார்.

    550 சவரன் நகை

    550 சவரன் நகை

    இப்படி சிறுக சிறுக திருடி 550 சவரன் நகைகளையும் பணத்தையும் சுவாதியிடம் சேகர் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மாடல் அழகி சுவாதியுடன் சேகரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுவாதியிடம் இருந்து நகைகளை மீட்பதற்காக அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.

    சுவாதிக்கு பக்க பலம்

    சுவாதிக்கு பக்க பலம்

    அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் சுவாதிக்கு பக்கபலமாக இருந்து நகைகளை பறிக்க திட்டம் தீட்டி கொடுத்தது அவரது புல்லட் காதலன் என தெரியவந்தது. அவர் கொடுத்த தைரியத்தில்தான் சேகரை மடக்கி நகைகளை கேட்டுள்ளதும் தெரியவந்தது. சேகர் கொடுத்த பணத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான டுகாட்டி பைக் ஒன்றை வாங்கியதும் தெரியவந்தது.

    புல்லட் காதலன்

    புல்லட் காதலன்

    அது போல் இருவரும் ஜாலியாக சுற்றுவதற்கு புல்லட் பைக்கையும் வாங்கி சுவாதி காதலனுக்கு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இரு பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். சுவாதி சேகரிடம் இருந்து அபேஸ் செய்த நகைகளை புல்லட் காதலன் பூந்தமல்லியில் உள்ள கடைகளில் அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து ஒரு கடையில் இருந்த 100 கிராம் நகைகளை மீட்டனர்.

    3 காதலிகளுக்கு ஜாலி செலவு

    3 காதலிகளுக்கு ஜாலி செலவு

    சுவாதியிடம் நடத்திய விசாரணையில் அடகு கடைகளின் லிஸ்ட் நீண்டுள்ளது. சேகரிடம் இருந்து சுவாதி வாங்கிக் கொடுத்த நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து புல்லட் காதலன் தனது 3 காதலிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் செலவு செய்து பார்ட்டி, சுற்றுலா என ஜாலியாக இருந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து நகை, பணத்தை மீட்க போலீஸார் முயற்சித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+