Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்மார்ட் மின் மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்கப்படாது..செந்தில் பாலாஜி உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போது, அதற்கு மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Recommended Video

    ADMKதான் மின்வாரியம் கடனில் இருப்பதற்கு காரணம் - Minister Senthil Balaji *Politics

    தமிழகத்தில் விரைவில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் வீடுகளில் மின்‌ பயன்பாட்டை அளவிடப்‌ பயன்படும்‌ மின்‌ மீட்டருக்கு மாதந்தோறும்‌ ரூ.60 மின் கட்டணம் வசூலிக்கவும் அதன்படி இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ.120 மின்‌ மீட்டருக்கான வாடகையாக வசூலிக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்‌ மின்சார வாரியம்‌ அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    மின் மீட்டர் வாடகை

    மின் மீட்டர் வாடகை

    இந்த பரிந்துரைக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்குமாயின், வரும் செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 120 ரூபாயை மின்‌ மீட்டருக்கான வாடகையாக செலுத்தும்‌ நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டணமானது, டிஜிட்டல்‌ மீட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்‌ என்று தெரிவிக்கப்பட்டது.

    ஸ்மார்ட் மின் மீட்டர்கள்

    ஸ்மார்ட் மின் மீட்டர்கள்

    அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட் மின் மீட்டர்களை பொருத்தவும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு மாத வாடகையாக ரூ.350 வசூலிக்கவும்‌ திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர்களை தங்களது மின் மீட்டரை, சொந்த பணத்தில் விலைக் கொடுத்து வாங்கி இருந்தால், வாடகை கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கட்டணம் வசூல்

    கட்டணம் வசூல்

    இதற்கிடையில் மின் மீட்டர்களை சேதம் அல்லது வேறு காரணகளுக்காக மாற்றினாலும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றினாலும் அதற்கான வசூலிக்கப்படும் பணிகளுக்கான கட்டணத்தை 100 சதவீதம்‌ உயர்த்திக்‌ கொள்ளவும்‌ தமிழ்நாடு மின்‌ வாரியம்‌ அனுமதி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    சென்னை சைதாப்பேட்டையில், 20 கோடி ரூபாய் செலவில், 140 இடங்களில் நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர், மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து சென்னையில், 294 கோடி ரூபாய் செலவில், 2,025 நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப் பட்டுள்ளன.

    வாடகை கிடையாது

    வாடகை கிடையாது

    வரும் மழை காலங்களில், மின் வினியோகம் நிறுத்தப்படக் கூடாது என்பதற்காக, 1,681 'பில்லர் பாக்ஸ்'களின் உயரம், தரையில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியான, மாதம்தோறும் மின் கணக்கெடுப்பு நிச்சயம் விரைந்து நிறைவேற்றப்படும். வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் போது, அதற்கு மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+