கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு!
சென்னை: "என்னது... பஸ்ஸு கலரு கோல்டு-ஆ? உள்ளே போனா சோபா சீட்டு, சில்லுனு ஏசி... இது நம்ம எம்.டி.சி தானா?" - சென்னைவாசிகளின் லேட்டஸ்ட் ஆச்சரியம் இதுதான்!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, "எம்.டி.சி பஸ்ஸுனா படிகட்டுல தொங்கணும், இன்ஜின் சத்தத்துல காது அடைக்கணும்" என்பதுதான் எழுதப்படாத விதி. ஆனால், அந்த பிம்பத்தை 'டோட்டலாக' மாற்றி அமைத்திருக்கிறது போக்குவரத்துத் துறை. இப்போது சென்னை சாலைகளில் மின்னலாய் வலம் வரும் அந்த "கோல்டன் பஸ்" (Golden Bus) தான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன்!

தங்கம் மின்னும் 'பிரீமியம்' லுக்!
சாதாரண பச்சை, நீலப் பேருந்துகளைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு, அந்த மெட்டாலிக் கோல்டு நிறத்தில் பளபளக்கும் புதிய எலக்ட்ரிக் பேருந்துகள் ஒரு 'லக்ஸுரி கார்' ஃபீலைத் தருகின்றன. "வெளியே மட்டும் இல்லை பாஸ், உள்ளே போனா இன்னும் வேற லெவல்!" என்கிறார் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர்.
உள்ளே என்ன ஸ்பெஷல்?
குஷன் சீட்கள்: ஆணி குத்திய பழைய பலகை சீட்கள் இல்லை; நீண்ட தூரம் பயணித்தாலும் அலுப்புத் தெரியாத சொகுசான குஷன் இருக்கைகள்.
மௌனப் புரட்சி: இது எலக்ட்ரிக் பஸ் என்பதால், பழைய பேருந்துகள் போல 'கர்ர்ர்' சத்தம் கிடையாது. நிசப்தமான, அமைதியான பயணம்.
லிமிடெட் ஸ்டாப்ஸ்: "எங்க பார்த்தாலும் கை காட்டினா நிக்காது!" முக்கியமான நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பதால், மெட்ரோ ரயிலுக்கு இணையான வேகத்தில் பயணிக்க முடிகிறது.
சென்னை டூ கிளாம்பாக்கம்: இனி 'ராயல்' ரைடு தான்!
முக்கியமாக, கிளாம்பாக்கம் (KCBT) புதிய பேருந்து முனையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு இந்தப் பேருந்துகள் ஒரு வரப்பிரசாதம். நீண்ட தூரப் பயணத்தில் புழுதி இல்லை, சத்தம் இல்லை, வியர்வை இல்லை.
மெட்ரோவுக்குப் போட்டியாகவோ அல்லது மெட்ரோவுடன் இணைந்த இணைப்பாகவோ (Last Mile Connectivity), பொதுப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த 'தங்கப் பேருந்துகள்' நிச்சயம் உதவும். ஆனால், இந்த 'தங்கமான' பராமரிப்பு காலம் முழுதும் தொடருமா என்பதுதான் சாமானிய மக்களின் ஒரே கேள்வி.
மாற்றம் அடைந்த தமிழக பேருந்துகள்
தமிழக போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நவீன மாற்றங்கள், சாதாரண பயணிகளைத் தாண்டி உலகத்தரம் வாய்ந்த வசதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சிவப்பு நிற ஏசி பேருந்துகள், மின்சாரப் பேருந்துகள் மற்றும் தாழ்தளப் பேருந்துகள் என மூன்று பிரிவுகளிலும் கொள்முதல் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
சிவப்பு நிற ஏசி மற்றும் டீலக்ஸ் பேருந்துகள்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்காக (MTC) மட்டும் முதற்கட்டமாக 500 ஏசி மற்றும் 250 ஏசி அல்லாத புதிய பேருந்துகள் வாங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் காலாவதியான பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு, புதிய பிஎஸ்-6 (BS-VI) ரகத்தைச் சேர்ந்த சுமார் 3,000 நவீன பேருந்துகளை வாங்குவதற்காக 471 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சிவப்பு நிற டீலக்ஸ் பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளன.
மின்சாரப் பேருந்துகள் (EV Buses)
சுற்றுச்சூழலை காக்க மின்சாரப் பேருந்துகளுக்கு தமிழக அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சென்னையில் தற்போது 625 மின்சாரப் பேருந்துகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கனவே சுமார் 380 பேருந்துகள் பூந்தமல்லி, பெரும்பக்கம் மற்றும் வியாசர்பாடி போன்ற பணிமனைகளில் இருந்து தங்களது சேவையைத் தொடங்கிவிட்டன. இதற்கடுத்த கட்டமாக, உலக வங்கி நிதியுதவியுடன் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு தலா 100 மின்சாரப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Premium Buses flagged off in Chennai! Aimed at office going IT corridor crowds in particular. Pre booking seats, work on the go etc.
— Venugopal AV (@VenugopalAV) March 11, 2026
Kudos @MtcChennai and all stakeholders involved. @UpdatesChennai @TamilNaduInfra @Super_Chennai_ pic.twitter.com/UZEY9G64RF
தாழ்தள பேருந்துகள் (Low Floor Buses)
அனைவரும் எளிதாகப் பயணிக்கும் வகையில், இனி வரும் காலங்களில் நகரப் பேருந்துகள் அனைத்தும் தாழ்தள பேருந்துகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 1,701 தாழ்தள டீசல் பேருந்துகளை வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் 'ஃபீடர்' (Feeder) சேவைக்காக 220 சிறிய ரக ஏசி மின்சார தாழ்தள பேருந்துகளும், 300 மினி பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2026-க்குள் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஓடும் பேருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை நவீன ஏசி மற்றும் தாழ்தள வசதி கொண்டதாக மாறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications