சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாவ்! சென்னை ஏர்போர்ட்டில் காத்திருக்க இனி போர் அடிக்காது.. இந்தியாவிலேயே முதல் முறையாக தியேட்டர்!

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக சூப்பரான பொழுதுபோக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை : இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில், 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் இனி போர் அடித்தால், அங்கேயே இருக்கும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம்.

விமான நிலையங்களில், இணைப்பு விமானத்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படும் போதெல்லாம், இங்கு ஒரு தியேட்டரோ, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸோ இருந்தால் நன்றாக இருக்குமே என பலரும் யோசித்திருப்பார்கள்.

அந்த யோசனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், திரையரங்கம், ஹோட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன.

அப்படி போடுங்க.. புதுசா வருகிறது 50 ஏர்போர்ட்! அறிவித்த நிர்மலா சீதாராமன்! அதானி என எதிரொலித்த கோஷம்அப்படி போடுங்க.. புதுசா வருகிறது 50 ஏர்போர்ட்! அறிவித்த நிர்மலா சீதாராமன்! அதானி என எதிரொலித்த கோஷம்

ஏர்போர்ட்டில் தியேட்டர்

ஏர்போர்ட்டில் தியேட்டர்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து அதிக நேரம் காத்திருக்கும் பயணிகள், சென்னை வந்து இணைப்பு விமானத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் பயன்படவுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறை

இந்தியாவிலேயே முதல் முறை

சென்னை விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கும், உறவினர் அல்லது நண்பர்களை வரவேற்கவோ, வழியனுப்பவோ காத்திருப்பவர்களுக்கும் இந்த திரையரங்குகள் நிச்சயம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் 1150 பேர்

ஒரே நேரத்தில் 1150 பேர்

ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்குகளில் சுமார் 1,150 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம். சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்குகளை நடிகர் சதீஷ் ,ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மற்ற வசதிகளும்

மற்ற வசதிகளும்

சென்னை ஏர்ப்போர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய அளவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற வசதிகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு விடுதிகள், சில்லறை கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

English summary
For the first time in India, a 5-screen cinema theater has opened at Chennai Airport. Passengers who are waiting for a long time at Chennai airport can go to the theater to watch the movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X