• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா எக்ஸாம் பீஸ் கட்டணும்! கமெண்ட் செய்த கல்லூரி மாணவி! ஜி.வி.பிரகாஷ் என்ன செய்தார் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை : கல்லூரியில் படிக்கும் தனக்கு தேர்வு கட்டணம் செலுத்த உதவ வேண்டும் என கல்லூரி மாணவி ஒருவர் ட்விட்டர் கமாண்டில் கோரிக்கை வைத்த சில நிமிடங்களிலேயே அந்த மாணவிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் உதவி இருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் இருக்கும் இளம் இசையமைப்பாளர்கள் முக்கியமானவர் என்றால் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு முக்கிய இடம் உண்டு. இசையமைப்பாளராக மட்டுமல்லாது நல்ல ஒரு நடிகராகவும் தமிழ் திரை உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி தமிழுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகனான பிரகாஷ் குமார் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அப்பாகிட்ட சொல்லிடுங்க..எஸ்.ஆர்.எம் விடுதியில் திறக்காத கதவு! திறந்து பார்த்தால்.. காத்திருந்த ஷாக்! அப்பாகிட்ட சொல்லிடுங்க..எஸ்.ஆர்.எம் விடுதியில் திறக்காத கதவு! திறந்து பார்த்தால்.. காத்திருந்த ஷாக்!

ஜிவி பிரகாஷ் குமார்

ஜிவி பிரகாஷ் குமார்

வெயிலோடு விளையாடி உள்ளிட்ட இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும் சிறுவயதிலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றிய படங்களில் பங்கெடுத்திருக்கிறார். கிரீடம், பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் அவரது கேரியரில் முக்கியமான படங்கள்.

பல உதவிகள்

பல உதவிகள்

மேலும் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், ஜெயில், நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் தோன்றி தன்னை ஒரு நல்ல நடிகனாகவும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். திரை உலகத் தாண்டி சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தனக்கு தோன்றிய கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது ஜிவி பிரகாஷின் வழக்கம் மேலும் பலருக்கு உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

ட்விட்டர்

ட்விட்டர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்ட அவர் 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பெற்றார்' இது தொடர்பாக புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் 'பருந்தாகுது ஊர்க் குருவி' என்ற தலைப்புடன் பதிவிட்டு இருந்தார். அதனை ஆயிரக்கணக்கான லைக் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று நிலா பேக்ரவுண்டில் கூலிங் கிளாஸ் உடன் மாஸாக இருக்கும் தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் ஜிவி பிரகாஷ்.

மாணவிக்கு உதவி

மாணவிக்கு உதவி

அதனை ஏராளமானோர் லைக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் ஒரு மாணவி கமண்ட் செய்திருந்தார். அதில் "நான் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ படிக்கிறேன். இந்த மாதம் என்னுடைய கல்லூரி தேர்வுகள் தொடங்க இருக்கிறது. எனது தேர்வு கட்டண விவரத்தை இணைத்து இருக்கிறேன். உங்களது உதவி தேவை" என கேட்டிருந்தார். இந்த மாணவியின் கமெண்டை படித்த ஜிவி பிரகாஷ் பணம் உங்களது கூகுள் பே கணக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டது என பதில் அளித்திருக்கிறார். கல்லூரி மாணவி கேட்டவுடன் உதவிய ஜிவி பிரகாஷ் குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

English summary
A few minutes after a college student made a request on Twitter to help her studying in college, the news of music composer and actor GV Prakash Kumar helping the student is getting praise on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X