சட்டசபையில் மீண்டும் ஒலித்த "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... கடல் போல சாதனை என பெருமிதம்
ஓராண்டு காலத்தில் உண்மையுடன் உழைத்தேன்; என் மீது கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என முதல்வர் கூறியுள்ளார்.
சென்னை: ஓராண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
Recommended Video
சென்னை: ஓராண்டு என்பது துளி போல என்றாலும் அதில் கடல் போல சாதனைகளை செய்திருப்பதாக சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 60 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

முதல்வராக பதவியேற்கும் போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று பேச ஆரம்பித்த ஸ்டாலின்,
நான் கலைஞர் அல்ல அவரைப்போல் எழுத தெரியாது, பேச தெரியாது, ஆனால் அவரைப்போல் உழைக்க தெரியும் என்று கூறினார். ஆட்சி பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஓராண்டு காலத்தில் உண்மையுடன் உழைத்தேன்; என் மீது கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என முதல்வர் கூறியுள்ளார்.
இலவச பேருந்து பஸ் பயணம் தொடங்கி மக்களைத் தேடி மருத்துவம் வரைக்கும் தனது ஆட்சியின் ஓராண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்டார். ஆவின்பால் ரூ. 3 குறைக்கப்பட்டது, கொரோனா கால நிவாரண நிதி ரூ. 4000 தரப்பட்டதை தெரிவித்தார். நம்மைக்காக்கும் 48 திட்டம்,இல்லம் தேடி கல்வித்திட்டம் குறித்தும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இது திராவிட மாடல் அரசு என்று கூறிய அவர் ஓராண்டு ஆட்சி காலத்தில் கடல் போல சாதனைகள் செய்திருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். உக்ரைன் நாட்டு மாணவர்களை மீட்டு வந்ததையும் தெரிவித்தார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தியதாகவும் கூறினார்.
சமச்சீரான வளர்ச்சியை அடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 29C பேருந்தில் பயணித்து தான் நான் பள்ளிக்குச் சென்றேன். அந்த வழித்தட பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து 3 வழித்தடங்களில் 465 பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களின் மாத வருமானத்தில் 11% மிச்சமாகியுள்ளது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு ரூ.600 முதல் ரூ.1,200 வரை மாதந்தோறும் மிச்சமாகியுள்ளது.
கொரோனா கால உதவித்தொகையான 4 ஆயிரம் ரூபாயை 2.9 கோடி பேர் பெற்றுள்ளனர். ஆவின் பால் விலையை ரூ.3 குறைத்ததன் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். 108 அவசர ஊர்தி மூலம் பயன்பெற்றவர்கள் 16.41 லட்சம் பேர். கலைஞர் காப்பீடு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் 1.34 கோடி பேர். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் 1,24,000 பேர்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன்பெற்றவர்கள் 30 லட்சம் பேர். கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டவர்கள் 56 ஆயிரம் பேர். சமூக பாதுகாப்பு வளைகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கர்ப்பிணிகள் 96 ஆயிரம் பேர். 1.71 லட்சம் மீனவக் குடும்பங்கள் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். ஊரக பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 14.32 லட்சம் பேர். 68,800 பேர் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். 14,83,961 பேருக்கு கடந்த ஓராண்டில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 63,077 காவலர்கள் ஒருநாள் விடுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்.
நிதி நெருக்கடி போன்ற தடைகள் இருந்தாலும் தடைகளைத் தகர்த்து வெற்றி நடைபோட வேண்டும் என்ற நேர்மறை சிந்தனை கொண்டவன் நான்..எந்த நாளும் நான் உழைப்பேன் மக்களை என்றும் காப்பேன் என்றும் திட்டமிடுதல் இருந்தால் எத்தகைய செயலையும் நிறைவேற்றலாம் வாழ்க தமிழ்... வெல்க தமிழ்நாடு என்று கூறினார்.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications