மயிலை சிவா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி அழகு ராஜா சரண்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு!
சென்னை: ரவுடி மயிலை சிவா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரவுடி அழகு ராஜா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். தோட்டம் சேகரின் மகனான ரவுடி அழகு ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை 3-வது, கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த சிவக்குமார் என்ற மயிலை சிவா மீது 3 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள் என உள்ளிட்ட 35 வழக்குகள் இருந்தன. கொரோனா பரவல் காலகட்டத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ரவுடி மயிலை சிவா ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கடனை வசூலிக்க சென்ற இடத்தில், அசோக் நகரில் 2021 ஆம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகள் 5 பேர் கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி விரைந்த அசோக் நகர் போலீசார் 5 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் புழல் சிறையில் அடைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி தோட்டம் சேகரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க தோட்டம் சேகரின் மகன்கள் இருவர் திட்டம் தீட்டி 24 ஆண்டுகளுக்கு பின் மயிலை சிவாவை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
தோட்டம் சேகரின் மகன் அழகு ராஜா இந்த வழக்கு மட்டுமல்லாமல் பல குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அழகுராஜாவை போலீசார் பிடிக்க முயன்ற நிலையில் அவர் காரில் தப்பினார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே தனிப்படை போலீஸ்காரர் அழகுராஜாவை பிடிக்க முயன்ற நிலையில், அழகுராஜா காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றார். இதில் தொங்கியபடி சிறிது தூரம் வரை சென்ற போலீஸ்காரர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சென்னையை உலுக்கிய ரவுடி மயிலை சிவா கொலையில் தேடப்பட்டு வந்த தோட்டம் சேகரின் மகனும், முக்கிய குற்றவாளியுமான ரவுடி அழகு ராஜா, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே. கீதா ராணி முன்பு இன்று (டிசம்பர் 15) சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் சரண் அடைந்த அழகு ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழகு ராஜா மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் புழல் சிறைக்கு கொண்டு சென்று அழகுராஜாவை சிறையில் அடைத்தனர்.
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications