இடுப்பில் செருகிய புடவை.. ஏற்றி வாரிய கொண்டை.. கையில் துடைப்பக்கட்டை.. யார் இந்த பிரகலதா!
நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வேட்பாளர் பிரகலதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video

சென்னை: காலில் செருப்பு இல்லை.. தலையில் கொண்டை.. புடவையை வாரி இடுப்பில் செருகி கொண்டு கையில் ஒரு துடப்பக்கட்டையை எடுத்து பெருக்கி கொண்டு இருக்கிறார் பிரகலதா!
யார் இந்த பிரகலதா! இவர்தான் நாம் தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதி வேட்பாளர்! தன் கட்சி வேட்பாளர்களை சும்மா தேர்ந்தெடுப்பாரா என்ன சீமான்? எப்படி வடசென்னை வேட்பாளர் காளியம்மாளோ அதுபோலவே போர்க்குணம் நிறைந்த வேட்பாளர்!
திருமதி பிரகலதா ராம் எம்ஏ எம்எட் படித்திருக்கிறார். கொஞ்ச காலம் பேராசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். இது இவருடைய தனிப்பட்ட பொதுவான தகவல்தான். ஆனால் யாருமே அறியாத, மறைக்கப்பட்ட ஒரு விஷயம் உள்ளது.

சிறை சென்றவர்
அது என்னவென்றால், சேலம் 8 வழிச்சாலை என்ற கார்ப்பரேட் அறிவிப்பு வந்தபோது, விவசாயிகள் உருக்குலைந்தனர். அப்போது முதன்முதலில் போராட்டம் நடத்தியதுடன், அதற்காக சிறை சென்றவர்தான் இந்த பிரகலதா!

சாணி அள்ளுகிறார்
இவரை பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் என்று சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்தபோதுதான் பிரகலதா அவருடைய வீட்டில் வேலை பார்ப்பதுபோன்ற ஒரு வீடியோ இருந்தது. அவரது குடும்பம் விவசாய குடும்பம் போல தெரிகிறது. வீட்டில் மாடு வளர்க்கிறார்கள். அந்த மாட்டு தொழுவத்தைதான், இவர் சாணி அள்ளி, பெருக்கி துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.

கேள்விகள்
இந்த வீடியோவுக்கு பின்புறம் சீமான் குரல் ஒலிக்கிறது. வழக்கம்போல நாக்கை பிடுங்கி கொள்கிற அளவுக்கு கேள்வி கேட்கிறார் சீமான். அதில் அவர் பேசிய ஒரு சில வார்த்தைகள் இது:

சோறு எவன் போடுவான்?
"விவசாயம்தான் இனி நமக்கு அரசாங்க பணி.. எல்லாரும் ஐஏஎஸ் ஆயிட்டா எப்படி? ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆபீசர்ன்னா பசிக்காதா ராஜா? சோறு எவன் போடுவான்? யதார்த்தத்துக்கு வாங்கடா... வேளாண்மையை கைவிட்டிட்டீங்களே.. உலகம் ஒருநாள் சோத்துக்கு கையேந்தும்..

சாராயம்
டாஸ்மாக்குல சாராயம் ஊத்தி குடுக்கறவன் கவர்ன்மென்ட் எம்பிளாயிடா.. ஆனா உலகத்துக்கே சோறு போடற எங்க ஆத்தாளும் அப்பனும் கவர்மென்ட் எம்ப்ளாயி ஆக கூடாதா? பைத்தியக்கார பயலுகளே.. ஒரு காலம் வருது.. விவசாயத்துக்கு ஓய்வூதியம் தர்றோம் 60 வயசுக்குமேல! விவசாய அரசு பணியாக்கறோம்" என்று கர்ஜித்து கொண்டே போகிறார்.

தாலி அறுது
பிரகலதா விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரித்தவாறே சொல்கிறார் "விழுப்புரம் பகுதியில பார்த்தீங்கன்னா, நிறைய பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். நாங்க ஓட்டு கேட்டு போனா எங்ககிட்ட பெண்கள் சொல்றது, "மதுவால எங்க தாலி அறுது.. ஏதாச்சும் பண்ணுங்க, இதுவரைக்கும் எந்த தலைவரும் இதுக்கு ஒரு முடிவு கட்டல" என்பதுதான். களத்தில் இறங்கி போராடியது போதும்.. காசுக்கு ஓட்டு தந்தது போதும்.. கையில் அதிகாரம் இருந்தால்தான் நம்மால் எதையும் செய்ய முடியும்" என்று நம்பிக்கையுடன் பேசி செல்கிறார் பிரகலதா!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications