காரமாக தான் சாப்பிடுவீங்களா? ஆமாங்கய்யா! அப்பத்தான் நோய் வராது! முதல்வரிடம் கூறிய நரிக்குறவர் பெண்!
சென்னை: காரமாக சாப்பிட்டால் வியாதியே வராது என முதலமைச்சர் ஸ்டாலினிடம் நரிகுறவர் பெண் ஒருவர் கூறிய சுவாரஸ்ய நிகழ்வு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
முதல்வர் தங்கள் இல்லம் தேடி வந்து சிற்றூண்டி சாப்பிடுவதை பார்த்தால், கனவா இல்லை நினைவா என எண்ணத் தோன்றுவதாக அந்த நரிகுறவர் பெண் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நீங்கள் சமைத்த கறி சுவையாக இருப்பதாக நரிகுறவர் பெண்ணிடம் முதல்வர் பாராட்டிவிட்டு புறப்பட்டார்.

நரிக்குறவர் சமுதாயம்
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் குடும்ப அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதைத் தொடர்ந்து ஆவடி பேருந்துநிலையம் அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்றார். நரிகுறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவிகளான தர்ஷினி, பிரியா, திவ்யா ஆகியோர் ஏற்கனவே தன்னை சந்தித்த போது விடுத்த அழைப்பை ஏற்று அவர்களது இல்லத்துக்கு சென்றார் முதல்வர்.

முதல்வர் வருகை
முதலமைச்சர் ஸ்டாலின் வருகை பூரித்துப்போன நரிகுறவர் பெண் ஒருவர், தனது வீட்டில் சமைக்கப்பட்ட இட்லியையும், வடையையும் அவருக்கு சிற்றூண்டியாக கொடுத்தார். கூடவே அதற்கு தொட்டுக்கொள்ள நாட்டுக்கோழி குழம்பையும் கொடுத்தார். முதல்வர் அதை சாப்பிடத் தொடங்கியதும், காரமாக இருப்பதை உணர்ந்தார். உடனே தனது அருகில் நின்ற அந்த நரிக்குறவர் பெண்ணிடம், எப்போதும் காரமாக தான் சாப்பிடுவீங்களா என வினவினார்.

நோய் வராது
அதற்கு பதிலளித்த அந்தப்பெண் ''ஆமாங்கய்யா, அப்போது தான் ஜம்முன்னு இருக்க முடியும், காரமாக சாப்பிட்டால் சளி பிடிக்காது, காய்ச்சல் வராது எங்காளுக எல்லாம் அதனால் தான் நன்றாக இருக்கிறோம்'' என பதிலளித்தார். மேலும், கொரோனா இரண்டு அலைகளின் போதும் தங்கள் குடியிருப்பில் உள்ள நரிக்குறவர் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை எனக் கூறினார். உடனடியாக அதை ஆமோதித்த அமைச்சர் நாசர், இங்கு யாருக்குமே கொரோனா வரவில்லை என்றும் தடுப்பூசி செலுத்த வந்த போது மரத்தில் ஏறி ஒளிந்துகொண்டார்கள் எனவும் விளக்கினார்.

கனவா நினைவா
முதல்வர் தங்கள் இல்லம் தேடி வந்து சிற்றூண்டி சாப்பிடுவதை பார்த்தால், கனவா இல்லை நினைவா என எண்ணத் தோன்றுவதாக அந்த நரிகுறவர் பெண் சொல்லிக்கொண்டே இருந்தார். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு முதல்வர் கைகழுவ எழுந்தவுடன் ஐயா, இன்னும் இரண்டு வாய் சாப்பிடுங்க என வாஞ்சையுடன் நரிக்கிறவர் பெண் கேட்டுக்கொண்டார். முதல்வரின் இந்த விசிட் முழுக்க முழுக்க சுவாரஸ்யமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications