என் ஐ ஏ சோதனை: 'அத்தனை பாராட்டும் அமித்ஷா, அஜித் தோவலையே சாரும்'.. ஆடிட்டர் குருமூர்த்தி
சென்னை: 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய இந்த சோதனை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஒன்று என்று பாராட்டியுள்ள துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, 'அத்தனை பாராட்டுக்களும் அமித்ஷா, அஜித் தோவலையே சாரும்' என்றும் பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் என்றும் ட்விட் பதிவிட்டுள்ளார்.
தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடந்த 22 ஆம் தேதி என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது.
மொத்தம் 93 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

12 இடங்களில் சோதனை
அதிகாலையில் நடத்தப்பட்ட இந்த சோதனை தமிழகத்தில் மட்டும் சென்னை, கோவை, திண்டுக்கல், தேனி, கம்பம், சாயல்குடி, ஏர்வாடி உள்பட 12 இடங்களில் சோதனை நடந்தது. இதில் பி.எப்.ஐ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பி.எப்.ஐ அமைப்பினரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தொண்டர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டதால் நாட்டின் பல இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குருமூர்த்தி பாராட்டு
இதையடுத்து அனைவரும் அமைதி காக்குமாறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருந்தன. இந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஒன்று என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குருமூர்த்தி தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

அபாரமான நடவடிக்கை
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற சோதனை துல்லியமாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. எந்த தலைவர் எங்கு இருக்கிறார், எந்த ரயிலில்.. எந்த பெட்டியில் போய்க் கொண்டு இருக்கிறார்.. எந்த அறையில் தூங்கி கொண்டு இருக்கிறார்.. என அனைத்து விவரங்களையும் என்.ஐ.ஏ வசம் இருந்துள்ளது. வெறும் 45 நிமிடங்களில் 20 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள 90-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ, அந்த அமைப்பின் தலைவர்கள் 100 பேரை கைது செய்துள்ளது. இது அபாரமான நடவடிக்கை.

மிகவும் சிறப்பான யுக்தியாகும்
அதிகாலை நடைபெற்ற இந்த சோதனைகள் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வராமல் போனது. இதனால் தேவையற்ற குழப்பங்களும் பிரச்சினைகள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது. அந்த அமைப்பினர் தூங்கி கொண்டு இருந்த வேளையில், தலைவர்களோ விழிக்கவும் காவல்துறை வேனில் ஏற வேண்டியது இருந்தது. இந்த விவரங்கள் அனைத்தையும் காலையில் தான் தொண்டர்கள் அறிந்தனர். இது மிகவும் சிறப்பான யுக்தியாகும்.

அமித்ஷா, அஜித் தோவலையே சாரும்
ரகசிய தகவலில் துளியும் சமரசம் இன்றி 20 மாநில அரசுகள் மற்றும் அந்த மாநிலங்களின் போலீசாரை ஒருங்கிணைத்து இந்த ஆபரேஷன் நடைபெற்றது வியப்பளிக்கூடியது. தளர்வான கூட்டாட்சி அமைப்பு கொண்ட நமது நாட்டில் உண்மையில் இது மிகப்பெரும் சாதனையாகும். இதற்கான அத்தனை பாராட்டுக்களும் அமித்ஷா, அஜித் தோவலையே சாரும். பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.

காங்கிரஸ் அறிக்கை வெளியிடவில்லை
ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் ஆதரவாக வரும் என்ற பி.எப்.ஐ அமைப்பின் எண்ணமும் முற்றிலும் தவறாக அமைந்தது. பி.எப்.ஐ அமைப்பு எதிரி என்றே முஸ்லீம் லீக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. இந்த சோதனைகளை கண்டித்தோ ஆதரித்தோ காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications