சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‘பாத்திரம்’ கழுவனும்.. ஆசிரியை வேலைய விடனும்! புலம்பிய கணவன் - நீயா நானாவில் கோபிநாத் தந்த ‘3 ஆப்ஷன்’

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் தினசரி 200 கிலோ மீட்டர் பயணிக்கும் ஆசிரியையை பணி விலக சொல்லும் கணவரிடம் கோபிநாத் 3 ஆப்ஷன்களை கொடுத்தது அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோரும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம். சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

குறிப்பாக அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி, விளையாட்டு, சமூக ஊடகம் என பல்வேறு தலைப்புகளை கையில் எடுத்து காலத்துக்கு ஏற்ப நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் விவாதத்தை நடத்தி வருகிறார்.

கலங்க வைத்த 'அப்பா’.. கவுரவித்த நீயா நானா கோபிநாத்! பேச தெரியல.. படித்த தாய்க்கு ஆதரவாக கவிஞர் தாமரைகலங்க வைத்த 'அப்பா’.. கவுரவித்த நீயா நானா கோபிநாத்! பேச தெரியல.. படித்த தாய்க்கு ஆதரவாக கவிஞர் தாமரை

படித்த மனைவி VS படிக்காத கணவன்

படித்த மனைவி VS படிக்காத கணவன்

அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் படித்த அம்மா VS படிக்காத அப்பா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கணவர் வீட்டில் பாத்திரம், 'சமையலறையை நாங்கள்தான் கழுவ வேண்டி இருக்கிறது.' என்று சொல்ல, கோபிநாத், 'அவர்கள் சமைத்து கொடுத்துவிட்டுதானே செல்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கவும் செய்கிறார்கள்.

200 கிமீ பயணம்

200 கிமீ பயணம்

அப்போது அதை பகிர்ந்துகொள்ளதானே வேண்டும். இதில் என்ன இருக்கிறது." என்று கேட்டார். அப்போது பேசிய மனைவி, "நான் ஒரு நாளைக்கு 200 கிமீ பயணம் செய்து பணிக்கு செய்கிறேன். வீட்டுக்கு வந்தும் வேலை செய்கிறேன்." என்றவுடன் கோபிநாத், "இவ்வளவு தூரம் சென்றுவிட்டு வீட்டில் வேலை செய்ய முடியாது. இது என்ன ஆச்சரியமாக உள்ளது. எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள்." என்று கேட்டார்.

ஆசிரியை

ஆசிரியை

அப்போது அந்த பெண், "புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை செல்கிறேன். அங்குள்ள பள்ளியில் வேலை செய்கிறேன்." என்றவுடன் சிவகங்கைக்கே செல்ல வேண்டியது தானே என்று கோபிநாத் கேட்டார். "அவரின் வேலை புதுக்கோட்டையில் உள்ளது. அவருக்காக இங்கு இருக்கிறோம்." என்றார். அதற்கு கணவன், "வேலையை விட்டுவிடட்டும். நிம்மதியாக இருப்போம்." என்று சொனார்.

பெண் வேதனை

பெண் வேதனை

உடனே கோபிநாத், 2 பாத்திரத்துக்காக வேலையை விட வேண்டுமா? என்று கேட்டார். அந்த பெண், "நான் பல லட்சியத்துடன் படித்தேன். நானே வேலை செய்து படித்தேன். இதை வேலையாக செய்யவில்லை. என்னைபோல் பிறரை உருவாக்க விரும்புகிறேன். நான் பெற்றோர் இல்லாமல் வளர்ந்தேன். என்னுடைய திருமண செலவைக்கூட நானே செய்தேன்." என்று சொன்னார்.

கோபிநாத் கேள்வி

கோபிநாத் கேள்வி

உடனே கோபிநாத் கணவனை நோக்கி, "உங்கள் ஊதியம் குறைவு. நீங்கள் வேலையை விட்டுவிட்டு சிவகங்கை சென்றால் என்ன? எந்த பிரச்சனையும் கிடையாது." என்று சொன்னார். அந்த கணவர், "எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து வேலை செய்கிறோம்." என்று பதிலளித்தார். உங்கள் மனைவியும்தானே படித்திருக்கிறார் என்று கோபிநாத் சொல்ல, "இங்கேயே நிம்மதியாக இருக்கலாம்." என்று அவர் கூறினார்.

3 ஆப்ஷன்

3 ஆப்ஷன்

இதற்கு பதிலளித்த கோபிநாத், "நிம்மதி, மகிழ்ச்சி என்று பேசுவது எல்லாம் உங்களை சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. 3 ஆப்சன்கள் உள்ளன. ஏ) வேலையை விட்டுவிட்டு சிவகங்கை செல்வது. பி) வேலையைவிடாமல் சிவகங்கையில் இருந்தபடி 200 கிமீ பயணம் செய்வது. சி) 3 பாத்திரங்களை கழுவி வைப்பது." என்று சொல்ல ஆப்சன் சியே ஓகே சார் என கணவர் சம்மதிக்க அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

English summary
Neeya Naana gopinath gave 3 options to Husband who demanded her Teacher wife to resign her job for washing Kitchen and household works. The Teacher from Pudukottai travel 200 Kms daily to Sivakangai school
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X