Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நழுவி விழுந்த ‘பச்சை’! இவ்வளவு கேவலமாகவா? அடங்காத ‘திருச்சி சாதனா’! புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இனிமேல் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி நடிக்க மாட்டேன் என முதலைக் கண்ணீர் வடித்த திருச்சி சாதனா கடந்த சில நாட்களாக மீண்டும் ஆபாசமான வகையில் வீடியோ வெளியிடுவது, பேசுவது, புகைப்படங்கள் வெளியிடுவது என தனது வழக்கமான ஆட்டத்தை காட்ட தொடங்கி உள்ளதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருந்தார்கள். இதில் நன்மைகள் இருந்தாலும், ஒரு பக்கம் கைதாகும் அளவுக்கு குற்ற நடவடிக்கைகளும் அதிகரித்ததால் பின்னர் டிக்டாக் தடை செய்யப்பட்டது.

'ரவுடி பேபி' சூர்யா, திருச்சி சாதனா,திவ்யா, ஜி.பி முத்து என பலர் இந்த வரிசையில் உள்ளார்கள். டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து என்ன செய்வது என்று புலம்பிய நிலையில் ஒவ்வொரு டிக் டாக் பிரபலங்களும் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தங்களது வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 திருச்சி சாதனா வீடியோ

திருச்சி சாதனா வீடியோ

இந்த வரிசையில் அனைவருக்கும் மிகவும் தெரிந்த நபர்களில் ஒருவர் தான் திருச்சி சாதனா. டிக்டாக் தொடக்கத்தில் கிராமப்பெண்களிடம் இவ்வளவு நடிப்புத்திறமை உள்ளதா? என அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்தவர்தான் திருச்சி சாதனா.. இதோடு இவரது வீடியோவைப்பார்க்கும் ஒவ்வொருவரும் அக்கா உங்களுக்கு சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பது போன்ற பல கமென்ட்களையெல்லாம் தெறிக்க விட்டார்கள்.

யூடியூப் வீடியோ

யூடியூப் வீடியோ

பின்னர் தான் அவரது சுயரூபம் தெரிந்தது. கடந்த சில மாதங்களாக அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டதோடு, ஃபேஸ்புக் லைவ்வில் அரைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக பேசி தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்தார். அதிலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி சாதனா ஆபாசமாக பேசி யூட்யூப்பில் வெளியிட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றது.

மக்கள் புகார்

மக்கள் புகார்

இதனையடுத்து அவரது சொந்த ஊர் மக்களே காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் கடுமையாக எச்சரித்தனர். இதனையடுத்து இனிமேல் ஆபாசமாக பேசியோ நடிக்கவோ மாட்டேன் என மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிட்டார். இதனையடுத்து சில நாட்கள் அமைதியாக இருந்த நிலையில் மீண்டும் ஆபாச வீடியோக்கள், அரைகுறை நடனம் என அட்ராசிட்டிகளை ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மீண்டும் ஆபாசம்

மீண்டும் ஆபாசம்

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல் பச்சை சேலையில் நடனம் ஆட வந்த திருச்சி சாதனா, வேண்டுமென்ற சேலையை நழுவ வைத்து அதனை சரிசெய்வது பேல நடித்திருக்கிறார். அந்த வீடியோவில் நெட்டிசன்கள் பலரும் மிகம் கேவலமாக கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் அதிரடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நெட்டிசன்கள் கண்டனம்

நெட்டிசன்கள் கண்டனம்

இதில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எப்படி இருக்கு என கேட்டுள்ளார் திருச்சி சாதனா.. சிகப்பு கலர் நைட்டியில் கன்றாவியான போஸ் கொடுத்திருக்கும் அந்த புகைப்படத்தை கமெண்டுகள் குறித்து சொல்ல விரும்பில்லை, காரணம் அந்த அளவுக்கு கழுவி ஊற்றியிருக்கின்றனர். எனவே நீங்களே முடிந்தால் அதனை படித்து பாருங்கள். இந்நிலையில் எச்சரிக்கை விடுத்த போலீசார், திருச்சி சாதனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக வலைதளவாசிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+