ஒருத்தன ஏமாத்தனும்னா ஆசைய தூண்டனும்..நட்டியை நட்டை கழட்டும் நெட்டிசன்ஸ்! என்னென்ன கமென்ட்ஸ் பாருங்க!
சென்னை : 'இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன். தேசமே தெய்வம்'' என்ற நடிகரும் ஒளிப்பதிவாளுமான நடிகர் நட்டி (எ) நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில், 'அக்னிபத்' திட்டத்திற்கு ஆதரவாக பேசுவதாக நெட்டிசன்கள் அவர் பட டெம்பிளேட்களை வைத்து கலாய்த்து வருகின்றனர்.
இந்திய ஆயுதப்படையை பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் எழுந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனரும் நடிகருமான நட்டி என்ற நடராஜன்,"இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன். தேசமே தெய்வம்'' என பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அவைகள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர்.

அதே நேரத்தில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாக நடராஜ் பேசுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதையடுத்து மீம்ஸ்கள் மூலமும் கமெண்டுகள் மூலமும் நடராஜை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதுகுறித்து நடராஜ் நடித்த சதுரங்கவேட்டை படத்தின் ஆல் டைம் ஃபேவரிட் டயலாக்கான , ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்.." என மீம் போட்டுள்ளார் ஒருவர்.

'இவங்க ஏதோ பேசிக்கிறாங்களே அப்படினா என்ன என அருண் என்பவர் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காம்போவான சத்யராஜ் - கவுண்டமணி மீம் ஒன்றை வைத்து கலாய்த்துள்ளார்.

மேலும் ஒருவர் " நான் ஆர்மில இருந்த அனுபவத்துல சொல்றேன், அக்னிபத் நல்ல திட்டம், எந்த ஆர்மி.. ஓவியா ஆர்மி என 'ஜெய்ஹிந்த்' மீம் டெம்ப்ளேட்டை வைத்து கமெண்ட் செய்துள்ளார்.

அதே நேரத்தில் நடராஜனக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அக்னிபாத் அருமையான திட்டம் எனவும், அதற்கு ஆதரவளித்த நடராஜுக்கு நன்றி என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications