நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் 300 பணியிடங்கள்.. இந்தியில் பயிற்சி.. வெங்கடேசன் எதிர்ப்பு
சென்னை: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்றும் தேர்வுக்கு முன்பாக, தமிழ்நாட்டினருக்கு தனிப்பயிற்சி தேவை என்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா? என்ற பெயரில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது :
பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் (பொது) பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிக்கையை ஆகஸ்டு 24, 2021 அன்று வெளியிட்டது. இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தேர்வு அக்டோபர் 16, 2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைன்
விண்ணப்பித்துள்ள ஓ.பி.சி. எஸ்.சி., எஸ்.டி தேர்வர்களுக்கு தேர்வுக்கு முன்பாக பயிற்சி தரப்படும். முக்கியமான மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த முறை ஆன்லைனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. மிகவும் ஆர்வத்தோடு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழக மாணவர்கள்
முதல் நாளிலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி வழியில்தான் பயிற்சி தரத் துவங்கினர். அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியில்தான். வகுப்புகள் நடக்கின்றன. இது விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு எந்தவித பலனையும் தருவதாக இல்லை. இதில் கொடுமை என்னவென்றால், ஆங்கில மொழித்தாளுக்கான பயிற்சி வகுப்பையும் அவர்கள் இந்தியில்தான் நடத்தியிருக்கிறார்கள்.

வெங்கடேசன் கடிதம்
ஆகவே, தேர்வுக்கு முன்பாக, ஒரு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும். அதோடு, தேர்வர்களுக்குப் புரியும் மொழியில் நடத்திட வேண்டும் என்றும், வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேராவண்ணம் உறுதி செய்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியுள்ளேன்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழில் படிவங்கள்
மதுரை எம்பி சு வெங்கடேசன் ஏற்கனவே இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு நலன் சார்ந்த உரிமைகளுக்கு கடிதம் எழுதி வருகிறார். அண்மையில் அஞ்சல் நிலையங்களில் தமிழில் படிவங்கள் இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். அதற்கு செவிசாய்த்த மத்திய அரசு அதை அமல்படுத்த உத்தரவிட்டது. இரண்டு வாரங்களில் அனைத்து அஞ்சலக படிவங்களிலும் தமிழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் இயக்கம்
அண்மையில் தெற்கு ரயில்வேக்கு முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வேண்டும் என்று மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதினார். இதையடுத்து மதுரை ராமேசுவரம், திருச்சி திண்டுக்கல், கோவை மன்னார்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில்களை 7 ஆம் தேதி முதல் இயக்க உத்தரவிட்டது. இதற்காக தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ள வெங்கடேசன், மேலும் சில ரயில்களை இயக்க கோரிக்கை வைத்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications