புதிய பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள்.. அமைச்சர் நேருவின் அறிவிப்பு மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பல்வேறு பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் என அறிவிப்பு மழையை கொட்டினார் அமைச்சர் கே.என்.நேரு.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் நேரு வெளியிட்ட சில அறிவிப்புகள்:

சென்னை மாநகராட்சிக்கான அறிவிப்புகள்
- சென்னை மாநகராட்சியில் ரூ.75 கோடியில் புதிய பள்ளிக் கூட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
- வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து தட சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
- ஓட்டேரி, விருகம்பாக்கம் கால்வாய்களின் தடுப்புச் சுவர் ரூ.95 கோடியில் உயர்த்தப்படும். மேலும் குப்பைகள் தேங்காமல் இருக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடியில் பூங்காக்கள், பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும்.
- ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பினை தவிர்க்கவும் ரூ.120 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
- அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடியில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
- நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.
- கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம்,சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சிக் கூடங்கள் ரூ.60 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
- சென்னையின் முக்கிய இடங்களில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பு மூலம் நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.

இதர அறிவிப்புகள்:

- கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களும், ஈரோடு மாநகராட்சி ஆற்காடு, இராணிப்பேட்டை நகராட்சிகளின் பேருந்து நிலையங்கள் ரூ.142.68 கோடியில் கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர் ஆகிய நகராட்சிகளிலுள்ள பேருந்து நிலையங்கள் ரூ.84.26 கோடியில் மேம்படுத்தப்படும்.
- ரூ.704.76 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும்.
- தூத்துக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள், ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.62.95 கோடி மதிப்பீட்டில் புதிய சந்தைகள் அமைக்கப்படும்.
- வால்பாறை நகராட்சியில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
- ரூ.27.26 கோடி மதிப்பீட்டில் 50 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
- ரூ.311.78 கோடியில் 69,500 புதிய LED தெருவிளக்குகள் அமைக்கப்படும். 45,700 பழைய தெருவிளக்குகள் புதிய LED விளக்குகளாக மாற்றப்படும்.
- வால்பாறை நகராட்சியில் ரூ.6 கோடியில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
- புதியதாக உருவாக்கப்பட்ட நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் ரூ.48 கோடியில் புதிய மண்டல அலுவலகங்கள் கட்டப்படும்.
- மாநகராட்சி, நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி பள்ளிகளுக்குத் தேவையான புதிய வகுப்பறைகள், இதர உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.87.10 கோடியில் அமைக்கப்படும்.
- திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய மூன்று தேர்வு நிலை நகராட்சிகளை சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
- 11 பேரூராட்சிகளில் ரூ.49 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
- 8 பேரூராட்சி பேருந்து நிலையங்கள் ரூ.10 கோடியில் நவீனமயமாக்கப்படும்.
- போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பேரூராட்சிகளில் ரூ.33 கோடியில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும்.
- பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகள் ரூ.670 கோடியில் சீரமைக்கப்படும்.
- ரூ.60 கோடியில் அனைத்து கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அளவுமானிகள் பொருத்தப்படும்.

More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications