மீண்டும் ஸ்டார்ட்.. வங்கக்கடலில் உருவாகிறது புது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கிவிட்டது. அதேபோல் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கிவிட்டது.
கடந்த வாரத்திற்கு முன்பு வரை மழை விடாமல் பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2-3 நாட்களாக மழை குறைந்த நிலையில் வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. நாளை மறுநாளே தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

தாழ்வுப்பகுதி
டிச.17-ல் தென் மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வடகிழக்கு பருவக்காற்று வேகமாக வீசும். காற்றின் வேகம் 50 கிமீ வரை செல்ல கூடிய வாய்ப்பு உள்ளது.

காற்று வேகம்
கொஞ்சம் ஆக்ரோஷமாக இருக்கும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். அதேபோல் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை முதல் மழை
தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 19ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் வடமாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications