கல்வி நிறுவனங்களில் சாதி பெயர் வேண்டாம்.. தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரை
சென்னை: கல்வி நிறுவனங்களில் சாதிய வன்முறைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த சாதிய அடையாளமும் இருக்க கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறைகள் நடப்பதை தடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு பள்ளிகளின் பெயர்களில் எந்த சாதிய அடையாளங்களும் இருக்க கூடாது. ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த சாதி அடையாளமும் இருக்க கூடாது. இதேபோல் தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்க கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி தொடங்குவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள அந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் அதே சமூகத்தினரை சேர்ந்தவரை தலைமையாசிரியராக நியமனம் செய்யக் கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டினை தெரிந்துகொள்ள வேண்டும்.
கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றியில் திலகம் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர்












Click it and Unblock the Notifications