சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: பழிக்குப் பழி என்ற கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை என்று இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்கள், மனித நேயம் மனம் கொண்டோரைப் பதைபதைக்கச் செய்து இருக்கின்றது என்றும், 359 பேர்களைப் பலி வாங்கி இருக்கின்ற இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற ஐ.எஸ் அமைப்பு, நியூசிலாந்து நாட்டில் மசூதி மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

No religion has taught the vengeance concept Says Vaiko

யாரோ ஒரு இனவெறியன் செய்த தவறுக்காக, எந்தக் குற்றமும் செய்யாத பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உற்றார், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் நெஞ்சைப் பிளக்கின்றன என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.

இலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ! இலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ!

நியூசிலாந்து தாக்குதலை யாரும் ஆதரிக்கவில்லை. உலகமே கண்டித்து இருக்கின்றது. பழிக்குப் பழி என்ற கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை. அனைத்து மதங்களும், அன்பையும், அறத்தையுமே வலியுறுத்துகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். போன்ற வன்முறை இயக்கங்கள், இந்தியாவிலும் தாக்குதல் நடத்துகின்ற சூழல் உருவாகி இருக்கின்றது.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருந் தகைகளின் வழிகாட்டுதலில், திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட தமிழகத்திலும், சாதி மத வெறிப் பேச்சுகள் பெருகி வருகின்றன என்று சுட்டிக்காட்டி உள்ள வைகோ, சமூக வலைதளங்களிலும் இத்தகைய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாதி, மத மோதல்களால் பாதிக்கப்படுவோர் அப்பாவிப் பொதுமக்கள்தான். வேற்றுமைகளை மறந்து, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Vaiko Statement that Caste and religious fanatics have grown up, Young people should not fall victim to it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X