தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 26ல் தொடங்கும்... இயல்பான அளவு பெய்யும் - வானிலை மையம்
தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபா் 26ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக்காலமாகும். ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். டிசம்பர் வரை இப்பருவமழை தொடரும். கடந்த ஆண்டை பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் உருவான நிவர் மற்றும் புரேவி புயல் காரணமாக கனமழை பெய்தது. சென்னை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. முன்னெச்சரிக்கை காரணமாக அதிக அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பைவிட அதிக மழை கிடைத்தது.

வடகிழக்குப் பருவமழை எப்போது
நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன்,வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபா் 26ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக கூறியுள்ளார்.

அதிக மழைக்கு வாய்ப்பு
தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மழை வெளுத்து வாங்கும்
இதனிடையே தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
வெள்ளிக்கிழமையன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நிரம்பிய அணைகள்
தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான அணைகளில் நீர் நிரம்பியுள்ளன. அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையும் இயல்பான அளவு பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications