'நீட்' தேர்வு விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, முக்கிய ஆலோசனை தெரிவித்த சீமான்!
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக தென் மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்தித்து தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு மொத்தமாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் 306-ம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த் தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசனின் 34-ம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் நீத்த அனிதாவின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் மூன்று பேரின் உருவபடங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது:- அடிப்படையில் நாம் இயற்றும் எந்த சட்டங்களையும் மத்திய அரசு மதிப்பது இல்லை.

நீட் தேர்வு
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் எந்த முடிவு எடுத்தாலும் மத்திய அரசு மதிக்கவில்லை. எந்த சட்டமாக இருந்தாலும் கடுமையாக போராட வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர், மற்ற மாநில முதல்வர்களை சந்தித்து குறிப்பாக தென் மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்தித்து தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு மொத்தமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்

கருணாநிதி பாராட்டு கடிதம்
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தி.மு.க.வினர். ஆனால் அப்போது இவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நீட்டுக்கு வாழ்த்து என கலைஞர் கருணாநிதியே கடிதம் எழுதியுள்ளார். தரமான மருத்துவர் உருவாக வேண்டி நீட் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.

போலி மருத்துவர்கள்
ஆனால் குறைந்த மதிப்பெண்பெற்ற மாணவன் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது எப்படி? தரமான மருத்துவர் உருவாக்கவேண்டும் என்ற பெயரில் போலி மருத்துவர்களை உருவாக்குகிறார்கள். நீட் தேர்வால் நல்ல மாற்றம் வரும் என்று கூறுகிறார்கள். மருத்துவ படிப்பில் அதே பாடத்திட்டம்தான். அதே பேராசிரியர்தான் பாடம் நடத்தும் போது என்ன மாற்றம் வந்துவிடும் என்பது தெரியவில்லை.

கட்டாய தடுப்பூசி
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையியல் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு கட்டாய தடுப்பூசி , கல்லூரி மாணவர்களுக்கு கட்டாய தடுப்பூசி என்றும் கூறி உள்ளனர். ஊசி போட்டால் மீண்டும் கொரோனா வருகிறது என்கிறார்கள். ஆனால் கொரோனா தாக்கம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். ஆகவே குழப்பமாக உள்ளதால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி எப்படிப் பார்த்ததோ அதைத்தான் இப்போது அவர்கள் செய்கிறார்கள். தமிழில் கையெழுத்திடுவதை வரவேற்கிறேன். கோவிலில் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும்

விநாயகர் சிலை
விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக கடந்த ஆண்டில் கடைபிடித்தது தான் தற்போதும் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு பா.ஜ.க தலைவர் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications