வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், ‛கருப்பு பூஞ்சை'.. மருந்து கிடைக்க செய்யுங்கள்.. ஓபிஎஸ்
சென்னை: கருப்பு பூஞ்சை நோயினை தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், இத்தொற்றை ஆரம்பத்திலேயே தடுக்கும் வகையில் அதற்குரிய மருந்துகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா என்னும் உயிர்க்கொல்லி தொற்றின் இரண்டாம் அலை தற்போது கோரத்தாண்டம் ஆடிக்கொண்டிருப்பதையடுத்து, பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வோட வாழ்ந்து கொண்டிருக்கும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு இன்னும் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்., இல்லையென்றால் தமிழக மக்கள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் நிலை ஏற்படும்.

தடுப்பூசிகள்
புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஊரடங்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு தடுப்பூசி போடுவதும் இன்றியமையாதது. தமிழகத்தில் தற்போது மொத்தம் 70.82 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் வசதி
இது மேற்குவங்கம், உ.பி., பீஹார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, ஆந்திரா, ம.பி., போன்ற மாநிலங்களை விட குறைவாகும். தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் தங்கு தடையின்றி கிடைக்க கேட்டுக்கொள்கிறேன்.

வேண்டுகோள்
மேலும், ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் எடுத்து செல்லவும், தடுப்பூசியினை அதிக அளவில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

வெந்த புண்ணில் வேல்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், ‛கருப்பு பூஞ்சை' என்ற தொற்றுநோய் தற்போது இந்தியாவில் பரவி வருவதாக தகவல் வெளிவருகின்றன. தமிழகத்தில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் மதுரையில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஓபிஎஸ் கோரிக்கை
கருப்பு பூஞ்சை நோயினை தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், ‛முளையிலே கிள்ளி எறி' என்ற பழமொழிக்கேற்ப, இந்த தொற்றினை ஆரம்பத்திலேயே போக்கும் வகையில் அதற்குரிய மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications