சென்னையில் பகீர்.. பெண்களை அழைத்து வந்து "அது" பண்ணலாம்! ஓட்டல் டிஜிட்டல் திரையில் பகிரங்க அறிவிப்பு
சென்னை: சென்னை சின்னமலையில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஆபாசமான வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பயனாளர் ஒருவர் காவல்துறையினரை டேக் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஓட்டல்கள், மேன்ஷன்கள் ஒரு காலத்தில் சட்டவிரோதமாக நடவடிக்கைகளின் கூடாரமாக இருந்தது. இந்நிலையில் காலப்போக்கில் காவல்துறையின் கெடுபிடிகளையடுத்து இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டன. இதற்கிடையில் தனியார் தங்கும் விடுதிகள் தற்போது காளான்களை போல முளைக்கத் தொடங்கிவிட்டன.
முன்னர் இருந்த மேன்ஷன்களுக்கு யாராவது தங்க வேண்டுமெனில் நேரில் சென்று ஏன், எதற்கு என்கிற முழு விவரத்தை கூறினால்தான் ரூம்கள் வாடகைக்கு கிடைக்கும். ஆனால் தற்போது இன்நெட் உதவியுடன் வேறு ஒரு இடத்திலிருந்தே இவ்வாறு ரூம் புக் செய்துகொள்ளலாம் என்கிற ஆப்ஷன்கள் வந்த பிறகு, ரூம்பகளில் தங்குவதற்கு எந்த காரணமும் கூற வேண்டியதில்லை என்கிற நிலை உருவானது.

கல்லூரி மாணவர்கள்
இதனையடுத்து பலர் இதுபோன்ற தங்கும் விடுதியை தொடங்கி அதனை ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைத்தனர். ஆன்லைனில் புக் செய்துகொள்ளலாம், எளிய வழிமுறை, நேரில் சென்று கேட்டால் ஆளுக்கு ஏற்றார்போல் வாடகை சொல்லுவர்கள், ஆனால் ஆன்லைனில் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று சொல்லப்பட்டது என்று இது தொடர்பாக விளம்பரங்களும் இந்த வகை தங்கும் விடுதிகளை பிரபலமாக்கின. எதிர்பார்த்ததை போல இது இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இது ஆக்கப்பூர்வமானதாக சொல்லப்பட்டாலும், பல சட்டவிரோத செயல்களுக்கு அடிப்படையாகவும் அமைந்தது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், திருச்சியில் நடந்த சம்பவம்தான். திருச்சியில் உள்ள பிலபல தனியார் கல்லூரியின் மாணவர்கள் வாரம் ஒருமுறை ஓட்டல்களுக்கு வருவதுண்டு. அதன்பின்னர் எல்லோருமாக சேர்ந்து ரூமை வாடகை எடுத்து தங்குவார்கள்.

ஓட்டல்கள்
பின்னர் ஒருநாள் அந்த மாணவர்கள் குழுவிலிருந்த மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள் விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தன. அதாவது, இவர்கள் வாரந்தோறும் ஓட்டலுக்கு போவதும் அங்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு அதே ஓட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த குழுவில் உள்ள மாணவிகள் ஒவ்வொருவரும் வாரந்தோறும் ஏதாவது புது மாணவிகளை அழைத்து வர வேண்டும் என்பது டாஸ்க்.

ஆய்வு
இவ்வாறு அழைத்துவரப்படும் மாணவிகளுக்கு போதைப் பொருட்களை பயன்படுத்த கொடுத்து அவர்களை அடிமையாக்கி பின்னர் தங்கள் பாலியல் தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். இப்படியாக விஷயம் தெரியாமல் போய் மாட்டிக்கொண்ட மாணவி ஒருவர்தான் கல்லூரிக்கு செல்லாமல் பாதியிலேயே புறக்கணித்துள்ளார். இது குறித்து புகார்கள் ஏதும் கொடுக்கப்படாததால் காவல்துறையினர் கண்டும் காணாமலும் சென்றுவிட்டனர். ஆனால் இந்த விஷயங்களை தனியார் பத்திரிகை ஊடகம் ஒன்று விரிவாக ஆய்வு நடத்தி வெளியிட்டது.

சென்னை
ஆக தனியார் தங்கும் விடுதிகள் குறித்து விழப்புணர்வு இம்மாதிரியான செய்திகள் வெளிவரும்போது பரபரப்பாக பேசப்படும். பின்னர் இதைவிட பரபரப்பான செய்தி ஒன்று வந்தால் அது பேசுபொருளாகிவிடும். இந்நிலையில் சென்னை சின்னமலை அருகே பிரதான சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆபாசமான வகையில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்துள்ள டிவிட்டர் பயனர் ஒருவர் இந்த வீடியோவை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் காவல்துறையை டேக் செய்து டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

காவல்துறை கவனத்திற்கு
அதாவது, நடந்து செல்லும் பாதையிலேயே, அந்த ஹோட்டல் டிஜிட்டல் பலகையில் இப்படி ஒரு விளம்பரத்தை பகிரங்கமாக செய்துள்ளது. பெண்களை கூட்டி வந்து F*** செய்யலாம் என பட்டவர்த்தனாக விளம்பர பலகை, நமது சிங்கார சென்னையில் ஒளிர்ந்ததை அந்த வீடியோவில் பார்த்தவர்கள் அதிர்ந்துபோய்விட்டனர். இதனை புகாராக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் இந்த டிவிட்டுக்கு பதில் அளித்துள்ளனர். ஏற்கெனவே தனியார் தங்கும் விடுதிகள் மத்தியில் ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இந்த ஆபாச விளம்பரம் இக்குற்றச்சாட்டுகளை உண்மையாக்குவதை போல இருப்பதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications