ஒடிசா ரயில் விபத்து..உயிரிழந்த தமிழக பயணிகள் உடலை கொண்டு வர ஏற்பாடு..சென்னையில் உடற்கூராய்வு
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழக பயணிகளின் உடல்களுக்கு சென்னையில் உடற்கூராய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. இதில் 10 முதல் 12 பெட்டிகள் தரம் புரண்டதால் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன அதைத் தொடர்ந்து பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இந்த ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளும் தடம் புரண்டன.

மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு முதல் விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன. மீட்புப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விரைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனுடன் காணொளி வாயிலாக பேசி கள நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியுள்ளார். தமிழர்கள் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் திரும்பி சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளதால் ஒடிசாவில் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. உயிரிழந்த பயணிகளின் உடல்களை உடனடியாக சென்னைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உடற்கூராய்வு செய்வதற்காக பிணவறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காட்டுவதற்காக உறவினர்கள் புவனேஸ்வருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது.தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. பின்னர், உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications