அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு! சரி செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம்! ஹேப்பியாகி ரீல்ஸ் போடும் யூசர்ஸ்
சென்னை : நேற்று உலகின் பல பகுதிகளிலும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் திடீரென முடங்கிய நிலையில் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக அளவில் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. நடிகர்கள் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை பில்லியன் கணக்கானோர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்திருக்கின்றனர்.
பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக துவக்கப்பட்டாலும் பின்னர் அதன் தாய் நிறுவனமான மெட்டா இன்ஸ்டாகிராம் வலைதளத்தை வாங்கியது. வாட்ஸ் அப்பும் மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் முடக்கம்
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் பல மில்லியன்கள் அதிகரித்துள்ளது. டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு தங்கள் திறமைகளை வெளிக்காட்ட பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் நேற்று இரவு திடீரென உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்ஸ்டாகிராம் முடங்கியது.

பயனாளர்கள் அவதி
பலரது அக்கவுண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக செய்தியும் வந்தது. இதனால் குழம்பிப்போன பயனாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்சப் முடங்கிய நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமும் முடங்கியதற்கான காரணம் புரியாமல் தவித்தனர்.

களமிறங்கிய மெட்டா
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பலரது அக்கவுண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளதாகவும் இந்த பிரச்சினையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் இன்ஸ்டாகிராம் மின் பொறியாளர்கள் குறிப்பிட்ட அந்த 'பக்'கை சரி செய்தனர்.

மீண்ட இன்ஸ்டாகிராம்
இதை அடுத்து இன்ஸ்டாகிராம் மீண்டும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கணக்குகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வைரஸ் பாதிப்பா அல்லது ஹேக்கர்களின் கைவரிசையா என்பது குறித்து விளக்கம் அளிக்க இன்ஸ்டாகிராம் மறுத்துவிட்டது. எப்படி எனும் மீண்டும் ரீல்ஸ் செய்ய தயாராகி விட்டனர் பயனாளர்கள்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications