2 நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த கொரோனா.. தமிழ்நாட்டில் உயர்ந்த கேஸ்கள்.. இன்றைய நிலவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 23,888 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 1,61,171 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 29 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 37,038 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 15,036 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.இதுவரை தமிழ்நாட்டில் 29,87,254 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக 500 என்ற அளவில் கேஸ்கள் குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்றை விட இன்று கிட்டத்தட்ட 400 கேஸ்கள் கூடுதலாக பதிவாகி உள்ளது.
- 17 ஜனவரி: 23,443
- 16 ஜனவரி: 23,975
- 15 ஜனவரி: 23,989
- 14 ஜனவரி: 23,459
- 13 ஜனவரி: 20,911
- 12 ஜனவரி: 17,934
- 11 ஜனவரி: 15,379
- 10 ஜனவரி: 13,990
- 09 ஜனவரி: 12,895
- 08 ஜனவரி: 10,978
- 07 ஜனவரி: 8,981

சோதனை
இன்று தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்துள்ளதால், இன்னும் நாம் உச்சத்தை கடக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1,41,562 மாதிரிகள் கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 5,98,30,285 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. சோதனைகள் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்துள்ளது. இதுவரை 27,89,045 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

ஓமிக்ரான் கேஸ்கள்
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் புதிதாக உயரவில்லை. சென்னையில் அதிகமாக 144 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 241 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதில் 231 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 13 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை
சென்னையில் இன்று 8305 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 8 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் தற்போது 61691 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் இன்று 2228 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 5 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் தற்போது 11594 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 2143 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இன்று 3 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் தற்போது 16985 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications