Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்னி பேருந்து கட்டணக்கொள்ளை..நடவடிக்கை என்ன? அமைச்சர் சிவசங்கர் சொன்னது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இணையதளம் மூலமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயணியிடம் மீண்டும் டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதம் கட்டணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், சென்னை, காஞ்சிபுரம், பெங்களூரு, ஆந்திரா, போன்ற வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24ம்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கம்போல தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுவார்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தொடங்கி மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 5 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.

அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்

ஆய்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், திருவிழா காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டி, கூடுதல் பேருந்துகள் சேவை இன்று முதல் தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை முதல் வழக்கமான பேருந்துகள் 2100 உடன், 1430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுவரை 91,000 பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர் என்றார்.

சிறப்புபேருந்துகள்

சிறப்புபேருந்துகள்

இரண்டு நாட்கள் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 22ஆம் தேதி 1586 மற்றும் நாளை மறுநாள் 1195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கடந்த வருட தீபாவளியில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு இருப்பவர்கள் 77,000 பேர். இந்த ஆண்டு இதுவரை 1.04,000 பேர் முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்துள்ளனர். இந்த வருடம் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்க கூடும் என்ற கணிப்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

5 பேருந்து நிலையங்கள்

5 பேருந்து நிலையங்கள்

இவற்றை தாண்டி தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து பயணிப்பவர்கள், தங்கள் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கூடிய பேருந்து நிலையங்களை எளிதில் அடைய கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார். "சென்னையில் 5 பேருந்து நிலையங்கள் இயக்கப்படுகின்றன என்பதை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம், அந்தந்த பேருந்து நிறுத்தங்களுக்கு செல்வதற்காக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.

ஆம்னி கட்டணக்கொள்ளை

ஆம்னி கட்டணக்கொள்ளை

தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், குறிப்பிட்ட சில பேருந்துகள் இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை அறிந்தால், அவற்றை அறிந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயணியிடம் மீண்டும் டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதம் கட்டணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டாசு கொண்டு செல்ல தடை

பட்டாசு கொண்டு செல்ல தடை


சிறப்பு பேருந்துகள் பற்றாக்குறை இல்லாத வகையில் இன்று 750 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக இந்த பேருந்துகளும் பயன்படுத்தப்படும். மேலும் பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது, அவ்வாறு எடுத்து செல்வது தெரிந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

 டோல்கேட்களில் சோதனை

டோல்கேட்களில் சோதனை

ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள ஆர்டிஓக்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், வேலூர், கிருஷ்ணகிரி உட்பட தமிழகத்தில் கோயம்பேடு பஸ்நிலையம் தொடங்கி 49 டோல்கேட்களில் சுழற்சி முறையில், ஆம்னி பஸ்களை கண்காணிக்கின்றனர். இந்த குழுவினர் நேற்று நள்ளிரவு முதல் சோதனையை தொடங்கியுள்ளனர். வரும் 25ம்தேதி காலை வரையில் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

புகார் அளிக்க எண்கள்

புகார் அளிக்க எண்கள்

இதில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா டோல்கேட், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா டோல்கேட், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி டோல்கேட் கிருஷ்ணகிரி, ஒசூர் உட்பட 49 டோல்கேட்களில் ஆர்டிஓ மற்றும் மோட்டார் வாகன குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அதிக கட்டணம் வசூலை தடுக்க டோல்ப்ரீ நம்பரான 18004256151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+