சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்டத்தை தொடங்கியது DVAC.. ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னல்.. திடீர் ரெய்டு.. களைகட்டும் ஆபரேஷன் AAA!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. மாஜி அமைச்சர்களுக்கு எதிரான ஆரம்பகட்ட ரெய்டுகளில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையான DVAC இறங்கி உள்ளது.

Recommended Video

    Operation AAA ஆரம்பம் | MR Vijayabasakar | IT Raid | Oneindia Tamil

    ஒன் இந்தியா தமிழ் தளத்தில் நாம் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட செய்தியில் தமிழ்நாடு அரசு ஆபரேஷன் AAA என்ற அஸ்திரத்தை எடுக்க போவதாக குறிப்பிட்டு இருந்தோம். முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீது ஆக்சன் பாயலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆபரேஷன் AAAவை இன்று அதிகாரபூர்வமாக தொடங்கி உள்ளது. இந்த பெயரை வெளிப்படையாக வெளியே சொல்லவில்லை என்றாலும் அரசு முதல் கட்ட ரெய்டு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது.

    எம்ஆர் விஜயபாஸ்கரும் தோற்கிறார்.. கரூர் மாவட்டத்தை ஸ்வீப் செய்கிறது திமுக.. விகடன் கணிப்பு எம்ஆர் விஜயபாஸ்கரும் தோற்கிறார்.. கரூர் மாவட்டத்தை ஸ்வீப் செய்கிறது திமுக.. விகடன் கணிப்பு

    ஆபரேஷன் AAA

    ஆபரேஷன் AAA

    ஆபரேஷன் AAA என்பது "ஆகஸ்டில் ஆக்சன் ஆரம்பம்" என்பதன் சுருக்கம். ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்,நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் பலர் மீது ஆக்சன் எடுக்க வேண்டும் என்பதே ஆபரேஷன் AAA ஆகும். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக, சர்ப்ரைஸாக இன்றே தமிழ்நாடு அரசின் லஞ்சம் ஊழல் ஒழிப்பு துறை முதல் கட்ட ரெய்டில் இறங்கி உள்ளது.

    ரெய்டு

    ரெய்டு

    கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது. அதிகாலையிலேயே அவரின் வீடு, அலுவலகம், சொந்தமான இடங்கள் என்று 21 இடங்களில் தீவிரமான ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு எதிராக இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்கும் பதிவு செய்துள்ளது.

    முதல் கட்ட ரெய்டு

    முதல் கட்ட ரெய்டு

    முதல் கட்ட ரெய்டில் அவர் வருமானத்திற்கு புறம்பாக சொத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்றே இவர் மீது வழக்கு பதியப்பட்டதால் அவர் கைது செய்யப்பட அல்லது விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    எப்படி

    எப்படி

    ஆனால் இந்த நடவடிக்கை தொடக்கம்தான், இனிதான் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிகின்றன. கடந்த மாதம் 26ம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவி டிஜிபி கந்தசாமி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். சித்தரஞ்சன் சாலையில் முதல்வரை அவரது வீட்டில் கந்தசாமி சந்தித்து பேசினார். 1-1.30 மணி நேரம் நடந்த இந்த மீட்டிங்கில் அதிரடிக்கு பெயர் போன டிஜிபி கந்தசாமிக்கு முக்கிய அசைன்மெண்ட்களை முதல்வர் ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார்.

    பட்டியல்

    பட்டியல்

    அந்த அசைன்மெண்ட்களின் விளைவுதான் இந்த முதல் ரெய்டு என்கிறார்கள். அமித் ஷாவையே குஜாரத்தில் கைது செய்த அதிகாரி என்பதால் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவி டிஜிபியாக கந்தசாமி நியமிக்கப்பட்ட போதே அவரின் நியமனம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஊழல் புகார்கள், லஞ்ச புகார்கள் மீது ஸ்டிரிக்ட் நடவடிக்கை எடுக்க கூடியவர் என்ற பெயரும் டிபார்ட்மெண்டில் இவருக்கு உண்டு.

    என்ன லிஸ்ட்

    என்ன லிஸ்ட்

    ஸ்டாலின் மற்றும் கந்தசாமி இடையே நடந்த இந்த மீட்டிங்கில் முதல்வரிடம் முக்கியமான பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் செய்த ஒப்பந்தங்கள், டெண்டர்கள், பணமுறைகேடு என்று பல விஷயங்கள் குறித்த விவரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று இருந்துள்ளது. ஒவ்வொரு முன்னாள் அமைச்சரின் பெயர், அவர்கள் மீதான புகார்கள் என்று முழு விவரம் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்ட லிஸ்டில் இருந்ததாம்.

    கந்தசாமி

    கந்தசாமி

    கந்தசாமி டிஜிபி கொடுத்த இந்த லிஸ்டில் அப்போது கூடுதல் ஆதாரங்களை திரட்டும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில்தான் தற்போது கூடுதல் ஆதாரங்கள் திரட்டப்பட்டு முதல் ரெய்டு அரங்கேறி உள்ளது. எம். ஆர் விஜயபாஸ்கர் முதல் ஆளாக ரெய்டில் சிக்கி இருக்கிறார்.

    முதல் ஆள்

    முதல் ஆள்

    இது லிஸ்டில் இருந்த முதல் நபர்தான் எம்ஆர் விஜயபாஸ்கர். இன்னும் பலர் லிஸ்டில் இருக்கிறார்களாம். வேறு ஒரு முன்னாள் அமைச்சர்தான் முதலில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்ப்ரைஸாக கரூரில் இருந்து தமிழ்நாடு அரசு ஆக்சனை தொடங்கி உள்ளது.

    ஆனால்

    ஆனால்

    மேற்கு மண்டல அரசியல் சூடாக இருக்கும் போது சரியாக குறி வைத்து இப்படி ஒரு ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இன்னொரு முன்னாள் மேற்கு மண்டல மற்றும் மத்திய மண்டல அமைச்சருக்கு எதிராக இதேபோல் ரெய்டு நடத்தப்படலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Operation AAA: After Tamilnadu CM Stalin meeting DGP Kandasamy, DVAC starts its first raid against Ex Minister M R Vijaybhaskar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X