சென்னையில் எடப்பாடியை பிரதமர் புறக்கணிக்கணும்! டெல்லியில் லாபி செய்யும் ஓபிஎஸ் மகன்!
சென்னை: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிடக் கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.
Recommended Video
நாடாளுமன்றம் நடைபெறுவதால் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத், இதற்கான பணிகளை மிக கடுமையாக முன்னெடுத்து வருகிறார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்காததை போல், நாளைய தினம் சென்னையிலும் நேரம் ஒதுக்கக்கூடாது என ஓபிஎஸ் மகன் டெல்லியில் லாபி செய்து வருகிறார்.

பிரதமர் வருகை
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக நாளை மாலை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அப்போது அரை மணி நேரம் மட்டும் பாஜக நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசுகிறார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்டிருக்கிறார்கள்.

காய் நகர்த்தும் ரவி
இந்நிலையில் டெல்லியில் எப்படி எடப்பாடி பழனிசாமி புறக்கணிக்கப்பட்டாரோ அதேபோல் சென்னையிலும் அவரை பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் எம்.பி. டெல்லியில் தீவிரமாக லாபி செய்து வருகிறாராம். யாரிடம் சொன்னால் ஒர்க் அவுட் ஆகும் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் அவரது காய் நகர்த்தல்கள் இருக்கிறதாம்.

புகார் வாசிப்பு
எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் வழக்கு, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம், மற்றும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடுடைய கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி அதீத முக்கியத்துவம் கொடுத்து வருவது என்பன உள்ளிட்ட இன்னும் பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் பற்றி ரவீந்தரநாத் தரப்பிலிருந்து பாஜக மேல்மட்ட நிர்வாகிகளிடம் பற்ற வைக்கப்பட்டுள்ளதாம்.

இபிஎஸ் டீம்
ஓபிஎஸ் தரப்பில் இவ்வாறான முயற்சிகள் நடக்கும் நிலையில் சென்னையில் பிரதமரை சந்தித்துப் பேசி கெத்து காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிக உறுதியாக இருக்கிறது. பாஜக மாநில நிர்வாகிகள் மூலம் இதற்கான முன்னெடுப்பு பணிகளை எடப்பாடி பழனிசாமி டீம் செய்து வருகிறது.
-
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications