திடீர் மீட்டிங்.. பேப்பர் ஃபைனல்.. ‘புது ரூட்’ ஜெட் வேகத்தில் பறக்கும் ஓபிஸ் - குறுக்க வந்துறாதீங்க!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி இரவு சென்னையில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஓபிஎஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களான முக்கிய புள்ளிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி தீவிரமாக ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதன்படி, தலைமைக் கழக நிர்வாகிகளையும், புதிதாக மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். 21 பேரை புதிதாக முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் இறங்கும் நிலையில், சென்னையில் இருந்தபடி தனது ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

ஈபிஎஸ் vs ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, இரு தரப்பினருமே கட்சிக்குள் தங்களது தரப்பை வலுப்படுத்தும் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர். பொதுக்கூட்டங்களில் கவனம் செலுத்தி வரும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இடைக்கால பொதுச் செயலாளரான பிறகு இது அவரது முதல் மதுரை விசிட் ஆகும்.

கையெழுத்து வேட்டை
ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. விரைவில் தேர்தலை அறிவித்து நிரந்தர பொதுச் செயலாளர் ஆகத் திட்டமிட்டுள்ளார் ஈபிஎஸ். இதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளது ஈபிஎஸ் டீம். 2,532 பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரமாண பத்திரம் பெற்றுள்ளது.

ஓபிஎஸ் டீம் தீவிரம்
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஒரு வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர். ஒருங்கிணைப்பாளருக்கே கட்சியில் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்று 10 லட்சம் அதிமுக தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பணியில் இறங்கி உள்ளனர். இந்த வேலை ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஓபிஎஸ் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

திடீர் ஆலோசனை
இந்நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி இரவு கொளத்தூரில் உள்ள தனது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் அண்ணனின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். அவரது ஆதரவாளர்களான புகழேந்தி, மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முக்கிய நிர்வாகிகளுடன்
இந்த ஆலோசனையின்போது, அதிமுகவின் அரசியல் ஆலோசகராக தங்களால் நியமிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கியது குறித்தும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவது பற்றியும் ஆலோசித்துள்ளனர். மேலும், கட்சியில் அடுத்தகட்ட பணி பற்றியும் விவாதித்துள்ளனர். அதன்படி, எடப்பாடி என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், நாம் கட்சி நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும். நிர்வாகிகள் நியமனத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.

புது ரூட் - நிர்வாகிகள் பட்டியல்
அங்கேயே, புதிய நிர்வாகிகளின் பட்டியலை தயார் செய்துள்ளனர். தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல், கட்சியில் உள்ள பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பட்டியலை இறுதி செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு கழக மாவட்டங்கள் இருந்த நிலையில், மூன்றாகப் பிரிக்கும் முடிவையும் எடுத்து, அதற்கும் நிர்வாகிகளை ஃபைனல் செய்தனர். இப்படியாக, கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையில் ஜெட் வேகத்தில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ்.

தலைமை கழக நிர்வாகிகள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, மனோகரன் (அமைப்புச் செயலாளர்), அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் (அமைப்புச் செயலாளர்), சுப்புரத்தினம் (தேர்தல் பிரிவுச் செயலாளர்), ராஜலட்சுமி (மகளிர் அணிச் செயலாளர்), டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் (மருத்துவ அணிச் செயலாளர்), திருவாலங்காடு பிரவீன் (மாணவர் அணிச் செயலாளர்), இமாக்குலீன் ஷர்மிளி (மகளிர் அணி இணைச் செயலாளர்), முத்துக்குமார் (புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்), அமலன் சாம்ராஜ் பிரபாகர் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்), இந்திரா ஈஷ்வர் (மகளிர் அணி துணைச் செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள்
மேலும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட செயலாளராக செஞ்சி சேவல் ஏ. ஏழுமலை, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக துரைபாண்டியன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக மு. சுந்தர்ராஜன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரா கோவிந்தன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக மாரப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக வினோபாஜி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக செல்லப்பன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக பசும்பொன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக சுப்பிரமணியன், திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக வைகை பாலன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டுமா?
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமியும், ஈபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி ஓ.பன்னீர்செல்வமும் மாற்றி மாற்றி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வந்த பொதுக்குழு வழக்கு தீர்ப்பால், அந்த நடவடிக்கைகளை இரு தரப்பினருமே சில காலம் கைவிட்டிருந்தனர். இந்நிலையில் தான் மீண்டும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையை மீண்டும் முடுக்கி விட்டுள்ளார் ஓபிஎஸ். இதுபற்றி எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்!












Click it and Unblock the Notifications