தமிழ் மகன் உசேன் அனுப்பிய படிவம்.. கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக ஏற்பாரா ஓபிஎஸ்? என்ன செய்வார்?
எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிப்பாரா எதிர்ப்பாரா
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்வு செய்த வேட்பாளர் தென்னரசுவை ஓபிஎஸ் ஆதரிப்பாரா இல்லை எதிர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விளக்கத்தை தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் பதில் அளிக்கையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை என்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொது வேட்பாளரை நியமித்தால் நான் கையெழுத்திட தயார் என ஓபிஎஸ் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் இந்த யோசனையும் நன்றாக இருக்கிறதே என கூறிய நீதிபதிகள் அதிமுக வேட்பாளரை பொதுக் குழுவே இறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியிருந்தனர்.

75 அதிமுக மாவட்டங்கள்
அதன்படி அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் சுமார் 2,675 பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனுப்பி வைக்கப்பட்டு பொதுக் குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மகன் உசேன்
இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதை போல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இன்று மாலை 7 மணிக்குள்ளாக எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற விவரத்தை ஓபிஎஸ் தெரிவிக்க வேணடும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

தென்னரசு
இந்த நிலையில் தென்னரசுவை வேட்பாளராக அறிவிக்கும் படிவத்தில் ஓபிஎஸ் கையெழுத்திடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், நேற்றைய தினம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமசந்திரன் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிப்போம் என்றார். அது போல் ஓபிஎஸ்ஸின் எண்ணமும் இரட்டை இலை சின்னம் முடங்கிவிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

இரட்டை இலை சின்னம் முடக்கம்
மேலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ்ஸும் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுவிட்டார். எனவே படிவத்தில் குறிப்பிட்ட வேட்பாளரை ஏற்க மறுத்து அதிமுகவின் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்த மாட்டார் என்றே நாங்கள் கருதுகிறோம். தென்னரசுவை பொருத்தவரை அவர் ஏற்கெனவே இருமுறை ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்திருக்கிறார்.

குழப்பம்
எனவே அவரை தவிர்த்து வேறு ஒரு வேட்பாளரை இனியும் தேர்வு செய்ய நேரமில்லை, 7 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள். எனவே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த ஓபிஎஸ் விரும்ப மாட்டார். மேலும் அது ஓபிஎஸ்ஸுக்கே எதிராக போய்விடும். அவர் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்யவே இது போல் தென்னரசுவை ஏற்க மறுக்கிறார் என்ற பழிச்சொல்லும் ஏற்படும். எனவே இந்த இடத்தில் ஓபிஎஸ் தனது கெத்தை காட்ட மாட்டார் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர்
பாஜகவை பொருத்தமட்டில் ஓபிஎஸ் அறிவித்த செந்தில் முருகனை விட வலிமையான வேட்பாளர் தென்னரசு என்பதுதான். ஏற்கெனவே இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளரை விட்டுவிட்டு புதியதொரு வேட்பாளரை களமிறக்கினால் அது திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு சாதகமாகிவிடும் என்பதால்தான் பாஜகவும் எடப்பாடி தரப்பு வேட்பாளரை ஆதரித்துள்ளது என்கிறார்கள். இனி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையாக செயல்படுமா இல்லை, இது போல் மீண்டும் பிரிந்திருந்து சண்டையிட்டுக் கொள்ளுமா என தெரியவில்லை. ஆனால் பாஜகவை பொருத்தவரை ஒன்றிணைந்த அதிமுகவையே விரும்புகிறது. அதிமுக ஒன்றிணைந்தால் எங்களுக்கு கொண்டாட்டம் என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

வழிகாட்டி
அதிமுக ஓபிஎஸ் அணியின் வழிகாட்டியாக இருந்து வரும் பண்ருட்டி ராமசந்திரனே இரட்டை இலையில் எந்த வேட்பாளர் நின்றாலும் ஆதரிப்போம் என கூறிவிட்டார். இதனால் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொருத்தமட்டில் எந்த குழப்பமும் வராது என்பதுதான். ஓபிஎஸ் தரப்பு இபிஎஸ் தரப்பு இரண்டும் இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஓபிஎஸ்ஸையும் அவருடன் இருப்போரையும் எந்த காரணத்தை கொண்டும் அதிமுகவில் சேர்க்க கூடாது என்பதில் மூத்த நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்கள். எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சினை சுமூகமாக நடந்து முடிந்தாலும் ஒன்றிணைந்த அதிமுக என்பதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க வேண்டுமா என்பதற்கு பொதுக் குழு உறுப்பினர்களை கூட்டி எடப்பாடி பழனிசாமி ஓட்டெடுப்பு நடத்த வாய்ப்புண்டு. அவ்வாறு ஓட்டெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் எடப்பாடி ஆதரவாளர்களாக இருக்கும் பொதுக் குழு உறுப்பினர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
-
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்












Click it and Unblock the Notifications