பயணிகளிடம் ஒழுங்கீனம்.. ஒழுங்கா நடக்கனும்! அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை: மாநகர அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் எனவும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணித்து வருகிறார்கள்.
தொழிலாளர்கள், சிறு குறு வியாபாரிகள், மாணவ மாணவிகள், பெண்கள், அலுவல் பணியாளர்கள், நோயாளிகள் என பல தரப்பினர் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

நடத்துநர், ஓட்டுநர்
இப்படி அன்றாடம் மக்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வந்தாலும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். சில்லரை இல்லாவிட்டால் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், மரியாதை குறைவாக நடத்துவதாக பயணிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.

குற்றச்சாட்டுக்கள்
அதேபோல் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்றும், வேறு வழித்தடங்களில் மாற்றி இயக்குவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க நடத்துனர்களும், ஓட்டுநர்களும் மறுப்பதாகவும், விற்பனை பொருட்கள், விவசாய பொருட்களுடன் வரும் குறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்களை ஏற்ற மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

அறிவுறுத்தல்
குறிப்பாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இந்த பிரச்சனை அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சென்னை போக்குவரத்துக் கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பேருந்து வழித்தடம்
அதில், வேறு வழித்தடங்கள் மற்றும் சாலைகளில் மாநகர பேருந்துகளை இயக்கக்கூடாது என்று நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. பேருந்து நிலையத்திலேயே பயணிகளை இறக்கி விட வேண்டும் என்றும், அதற்கு முன்பாக நிறுத்தி இறக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சுமை கட்டணம்
பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு ஏற்ப உரிய சுமைக் கட்டண பயண சீட்டை நடத்துநர்கள் வழங்க வேண்டும் என்றும், பயணிகளுடன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அலட்சியமாக நடப்பதை முழுவதுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தவறாக பேசக்கூடாது
பணியின்போது வீணான வார்த்தைகளை, தவறாக பேசுவது, கைக்கலப்பில் ஈடுபடக்கூடாது என்றும், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பல்வேறு ஒழுங்கீனங்களில் ஈடுபடுவதால் வருவாய் இழப்பு மற்றும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவதாக சென்னை போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications