சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் வேண்டுமா.. வேண்டாமா.. இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18- ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு வேண்டுமா, இல்லை வேண்டாமா என்பது குறித்து இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 ஆகும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கைகளில் திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் செய்வோம் என்பவை இருந்தன. அதில் மக்களை பெரிதும் பாதித்த நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறின.

கடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை கடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை

பாஜக

பாஜக

இதில் திமுக, தேசிய கட்சியான காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததால் நீட் தேர்வு ரத்து என இரு கட்சிகளும் ஒத்து போய்விட்டன. அது போல் அதிமுக, தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்த போதிலும் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் பாஜக தனது நிலைப்பாட்டை நேற்று அறிவித்துவிட்டது.

ரத்து இல்லை

அதாவது நீட் தேர்வை ரத்து செய்யும்படி அதிமுக எங்களிடம் கோரவில்லை. அப்படியே கோரினாலும் அவர்களை சமாதானம் செய்வோம். மற்றபடி நீட் தேர்வு ரத்தெல்லாம் இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துவிட்டார்.

யாருக்கு வாக்கு?

யாருக்கு வாக்கு?

இதையடுத்து முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நீட்' தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது.

நீர் தேர்வு இருக்கும்

காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் 'நீட' தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18.

திணிக்கும் மத்திய அரசு

மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? என்று தொடர் டுவீட்டுகளில் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
P.Chidambaram asks that students and youngsters have to decide to whom you are going to vote, as all of you know ADMK and DMK alliance parties stand on Neet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X