“டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ ஐ லவ் யூ டூ” ... தேதி கேட்டா பாட்டாவே பாடலாம்!
இன்றைய தேதியில் இரண்டுகள் மட்டுமே இருப்பதை அரிய நாளாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: இன்றைக்கு யாராவது உங்களிடம் என்ன தேதி எனக் கேட்டால்.. "டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ ஐ லவ் யூ டூ "... என்ற பாடலைப் பாடலாம். காரணம் இன்றைய தேதி 22.02.2022.
ஒவ்வொரு நாளுமே சிறப்பான நாள்தான். ஆனால் ஒரு சில நாட்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் மேலும் சிறப்பாகி விடுகின்றன. இன்றைய நாளும் அப்படிப்பட்ட ஒன்று தான்.
தினமும் காலண்டரில் தேதியை மறக்காமல் பார்ப்பவர் நீங்கள் என்றால், நாங்கள் சொல்லாமலேயே இன்றைய நாளின் சிறப்பு உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம், இன்று தேதி, மாதம், வருடம் என எல்லாவற்றிலுமே இரண்டு இடம் பெற்றுள்ளது. அதாவது 22.02.2022. இரண்டாயிரத்து இருபத்தி இரண்டாவது வருடம், இரண்டாம் மாதம், இருபத்தி இரண்டாவது தேதி.
அதோடு, இந்த வரிசையை அப்படியே மாற்றிப் போட்டாலும் தேதி மாறாது என்பதும் மற்றொரு சிறப்பு.

கொண்டாட்டமான நாள்
ஒவ்வொரு ஆண்டுமே இப்படி ஒரு நாள் எல்லாமுமே ஒரே மாதிரி வருவது போல் அமைந்து விடும். அந்த நாளை சிலர் தங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகக் கருதி, முக்கியமான வேலைகளைச் செய்வதற்கு என ஒதுக்கி விடுவார்கள். சில பள்ளிகளில் இந்த அரிய நாளுக்கென தனி சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

வாழ்த்து
சமீபகாலமாக சமூகவலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதில் ஸ்டேட்டஸ் போட மட்டும் இது போன்ற நாட்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. சிலர் ஒரு படி மேலே போய் இந்த சிறபான நாளைக் கொண்டாடுங்கள் என வாழ்த்துக்களை எல்லாம் அனுப்புகிறார்கள்.

வித்தியாசம்
இது போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கோ மற்ற நாளைப் போல, இதுவும் 24 மணி நேரங்கள் கொண்ட வழக்கமான ஒரு நாள்தான் என கடந்து போய் விடுகிறார்கள். எது எப்படியோ இன்றைக்கு தேதியைச் சொல்லும் போது, நிச்சயம் அது வித்தியாசமாகத்தான் இருக்கும்.

பாட்டாவே பாடலாம்
இந்த அரிய நாளை மற்றவர்கள் கேட்கும் போது, நீங்கள் கமல் ரசிகர் என்றால், அன்பே சிவம் படத்தில் வரும் 'டூடூடூ..' என்ற டயலாக் மாதிரி கூறலாம். இல்லையென்றால் காத்து வாக்குல ரெண்டு காதல் பட பாடல் மாதிரி, "டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ ஐ லவ் யூ டூ ..." என பாட்டாகக்கூட பாடலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications