அரசியலமைப்பு சட்டம் 142யை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது ஏன்? பேரறிவாளன் விடுதலையின் பின்னணி விபரம்
சென்னை: உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகினால்தான் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் என தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றநீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர். அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டனர். மேலும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

பணியை செய்யாத ஆளுநர்
இந்நிலையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை ஏன் உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. அதன்படி பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018ல் தீர்மானம் நிறைவேற்றியது. மாநில அரசின் இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161ன் கீழ் ஆளுநர் முடிவெடிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் ஆளுநர் அதை செய்யவில்லை.

142வது பிரிவு பயன்பாடு ஏன்?
மாறாக இந்த விஷயத்தில் இறுதி முடிக்கும் எடுக்கும் அதிகாரம் தனக்கு கிடையாது என குடியரசு தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பினார். இது அரசியலமைப்பு படி தவறு. மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநர் முடிவுக்கு அனுப்ப விரும்பவில்லை. இதனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161ன் கீழ் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் அதில் தலையிட்டு முடிவெடுக்க உச்சநீதிமன்றத்துக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 வழிவகுக்கிறது'' என தெரிவித்த உச்சநீதின்றம் அந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகள் வரவேற்பு
பேரறிவாளனின் இந்த விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, நாம்தமிழர் உள்பட அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் வழக்கில் இருந்து விடுதலை ஆனதால் பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications