PM KISAN.. செங்கல்பட்டு விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. 15ம் தேதிக்குள் மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு நில விவரங்களை சரிபார்த்து தனிப்பட்ட விவசாயிகள் அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது என்றும், வரும் நவம்பர் 15-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றும் செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிறப்பு முகாமில் பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் பதிவு திட்டத்தின் மூலம் தரவுகளை சரிபார்த்து அவரவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் அல்லது விவசாயிகள் அடையாள அட்டை வழங்குகின்றன. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ₹6,000 உதவித்தொகை, பயிர்க் காப்பீடு, மானியங்கள் மற்றும் பிற அரசு நலத் திட்ட உதவிகளைச் சரியாக உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்காகவே அரசு இந்த அடையாள அட்டையை வழங்குகிறது. ஆதார் கார்டு போல் விவசாயிகளுக்கு இந்த விவசாய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.இதை வழங்குவதில் இன்னும் சில நோக்கங்களும் அரசுக்கு இருக்கிறது..

அதன்படி, ஒரே நிலத்திற்கான அல்லது ஒரே நபரின் பெயரில் உள்ள இரட்டைப் பதிவுகளை நீக்கி, திட்டப் பலன்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு விரும்புகிறது. அதேபோல் விவசாயிகளின் நிலப் பதிவுகள், பயிர் விவரங்கள், கடன் வரலாறு போன்ற அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் இணைத்து ஒரு விரிவான விவசாயிகள் தரவுத்தளத்தை உருவாக்கவும் அரசு விரும்புகிறது.
இதை உருவாக்கினால் தான் அரசால், விவசாயிகள் எந்த அளவிற்கு கஷ்டத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு அளிக்க வேண்டிய மானியம் எப்படி இருக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கொள்கை முடிவு எடுக்க முடியும். எனவே அடையாள எண் பெற விவசாயிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு நில விவரங்களை சரிபார்த்து தனிப்பட்ட விவசாயிகள் அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னணு முறையில் அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவு தளத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம். அரசு திட்டங்கள் சரியாக பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டங்களை பெற்றுகொள்ள முடியும். பிரதமரின் கவுரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் அனைத்தும் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் பதிவு திட்டத்தின் மூலம் தரவுகளை சரிபார்த்து அவரவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் கிராம அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் வருகை தந்து தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். எனவே, விவசாயிகள் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் கொண்டு இந்த முகாம்களிலும் மற்றும் அருகில் உள்ள சி.எஸ்.சி. பொது சேவை மையங்களிலும் வருகிற 15-ந்தேதிக்குள் பதிவு செய்து பயனடையலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications